ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ண இளம்பெண்: மொபைலுக்கு வந்த ஒரே மெசேஜ்- ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டாங்க!

|

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் முறை

ஆன்லைன் ஷாப்பிங் முறை

கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கினர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காட்டினர்.

ஸ்விக்கி, சொமாட்டோ, உபர் ஈட்ஸ்

ஸ்விக்கி, சொமாட்டோ, உபர் ஈட்ஸ்

குறிப்பாக ஆன்லைன் டெலிவரிகளில் முக்கியமான ஒன்று உணவு வகைகள். ஸ்விக்கி, சொமாட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளோடு உணவுகளை டெலிவரி செய்து வருகின்றன.

ஆர்டர் செய்த உணவு டெலிவரி

ஆர்டர் செய்த உணவு டெலிவரி

இந்த நிலையில் லண்டன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உபர் ஈட்ஸ்-ல் உணவு ஆர்டர் செய்துள்ளது. பர்கர் உள்ளிட்ட உணவுகளை அந்த பெண் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு தாங்கள் ஆர்டர் செய்த உணவு பொருள் டெலிவரிக்கு வந்துக் கொண்டிருக்கிறது என காண்பிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருள் வாங்க தயார் நிலையில் பெண்

தொடர்ந்து ஆர்டர் செய்த பொருள் வீட்டுக்கே வந்துவிட்டது என காண்பிக்கப்பட்டுள்ளது. உணவு பொருள் வாங்க பெண் தயாராக இருந்த நிலையில் அடுத்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. இதை பார்த்த அந்த பெண் அதிர்ந்து போகியுள்ளார்.

ஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் திடீரென தோன்றிய 'பூனை' முகம்.! இணையத்தில் வைரல்.!ஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் திடீரென தோன்றிய 'பூனை' முகம்.! இணையத்தில் வைரல்.!

Sorry Love Ate Your Food

பெண்ணுக்கு உணவு டெலிவரி செய்ய வந்த நபரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில் மன்னித்துவிடுங்கள் நான் உணவை சாப்பிட்டுவிட்டேன் (Sorry Love Ate Your Food) என கூறியுள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பசி இருந்திருக்கும் சாப்பிட்டுருப்பாங்க

பசி இருந்திருக்கும் சாப்பிட்டுருப்பாங்க

அடுத்ததாக அந்த பெண்ணுக்கு நீங்கள் ஆர்டர் செய்த உணவு டெலிவரி செய்து விட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து இந்த பெண் புதிய உணவை ஆர்டர் செய்துள்ளார். இந்த பெண் ஊபர் ஊழியரை குறை கூறவில்லை. காரணம் வழக்கமான நிகழ்வு போல் இல்லாமல் இந்த நிகழ்வு சற்று வித்தியாசமாக இருந்ததால் அந்த ஊழியரை மன்னித்துவிடுகிறேன் என அந்த பெண் கூறியுள்ளார்.

வேடிக்கையாகவே பார்க்கிறேன் என்ற பெண்

வேடிக்கையாகவே பார்க்கிறேன் என்ற பெண்

டெலிவரி செய்ய வந்த ஊழியர் அதிக பசியுடன் இருந்திருக்கலாம் எனவும் அதன்காரணமாக இந்த உணவை உண்டிருக்கலாம் எனவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும் இந்த காலக்கட்டத்தில் தன்னால் ஒரு ஊழியர் வேலை இழப்பதை தான் விரும்பவில்லை எனவும் உணவை உண்ட ஊழியர் அதை மறைக்காமல் நேர்மையாக தன்னிடம் கூறியது சிறந்த விஷயம் எனவும் இந்த விஷயத்தை வேடிக்கையாகவே பார்க்கிறேன் எனவும் அந்த பெண் தெரிவித்தார்.

Pic Courtesy: Social Media

Source: thesun.co.uk

Best Mobiles in India

English summary
"Sorry Love Ate Your Food" Uber Eats Delivery Driver Sent Message to ordered Girl

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X