இப்படியெல்லாம் கப்பலை சோதனை செய்யனுமா? நடுக்கடலில் நடந்த சோதனை: வைரலாகும் வீடியோ.!
சில நாடுகள் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, அதில் 20 டன் எடை கொண்ட வெடிகுண்டை நடுக்கடலில் வெடிக்கச்செய்து சோதனை செய்துள்ளனர். இது பற்றிய தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வெளிவந்த தகவல்களின்படி, அமெரிக்காவின் விமானம் தாங்கிய போர்க் கப்பல் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கப்பலின் பெயர் USS Gerald R Ford (CVN 78) என்று அழைக்கப்படுகிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்காவின் கடற்படை புதிய கப்பல்களின் வடிவமைப்பைச் சரிபார்க்க நேரடி போர் வெடிபொருட்களைப் பயன்படுத்தி இந்த சோதனையை செய்கிறது. மேலும் போர் ஏற்படும் சூழ்நிலைகளில் கப்பல்களின் திறனை சோதிக்கும் வகையில் நீருக்கடியில் வெடிபொருட்களை வெடிக்கச் செய்து கப்பல்களின் உறுதி மற்றும் நிலைத்தன்மை சோதிக்கப்படுகிறது.

அதேபோல் இந்த சோதனைக்கு வேண்டி 40,000 பவுண்ட் எடைகொண்ட வெடிமருந்துகள் பயன்படுத்துப்பட்டுள்ளது. பின்பு இந்த வெடிப்பை தொடர்ந்து 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க கடற்படை ஆனது இந்த வெடிகுண்டு சோதனை காட்சிகளை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த வீடியோவில் வெடிகுண்டு வெடித்ததும் விமானம் தாங்கிய போர்க் கப்பல் ஆடுவதை பார்க்கமுடிகிறது.

ஆனாலும் சிலர் இந்த நிகழ்வுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வாதாரம் குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர். சிலர் இதுபோன்ற சோதனைகள் மூலம் பவளப்பாறைகள் மற்றும் கடலில் வசிக்கும் உயரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications