இனி "பிலைட் மோடு" கிடையாது.! 30,000 அடிக்குமேல் பறக்கும் போதும் மொபைல் உபயோகிக்கலாம்.!

மிக விரைவில் உங்கள் விமான பயணத்தின் போது வாய்ஸ் கால்ஸ் மற்றும் இணையம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று ஒரு புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

By Sharath
|

மிக விரைவில் உங்கள் விமான பயணத்தின் போது வாய்ஸ் கால்ஸ் மற்றும் இணையம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று ஒரு புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வானில் 30,000 அடிக்கு மேல் பறக்கும் பொழுதும் உங்களின் மொபைல் போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களின் விமான பயணத்தின் பொது "இன்-பிலைட்(In-Flight)" சேவை மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படுமென்று டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம்

அக்டோபர் மாதம்

இந்த புதிய இன்-பிலைட் சேவை அக்டோபர் மாதத்தில் இருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுமென்று டெலிகாம் நிறுவன உறுதியளித்துள்ளது.

இன்-பிலைட் சேவை

இன்-பிலைட் சேவை

இறுதிக்கட்ட செயல்பாட்டிற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இந்த இன்-பிலைட் சேவைக்கான உரிமம் இரண்டு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று தொலைத்தொடர்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொது கலந்தாய்வு கூட்டம்

பொது கலந்தாய்வு கூட்டம்

அடுத்தகட்டமாகத் தொலை தொடர்பு நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இந்தக் கலந்தாய்வில் தேர்வு செய்யப்படும் டெலிகாம் நிறுவனத்திற்கு இன்-பிலைட் சேவைக்கான உரிமம் வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

 இன்-பிலைட் சேவை கட்டணம்

இன்-பிலைட் சேவை கட்டணம்

இந்த இன்-பிலைட் சேவையை உங்கள் விமான பயணத்தின் பொது நீங்கள் பெறுவதற்கு கூடுதல் சேவை கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டெலிகாம் நிறுவனங்கள் எப்படியும் அவர்களின் புது சேவைப் பலன்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்துவிடுவார்கள் என்பதே உண்மை.

டேரிஃப் பிளான்

டேரிஃப் பிளான்

இந்த வான் வழி சேவைக்கான கட்டணம் கண்டிப்பாக தரையில் கிடைக்கும் மொபைல் சேவை டேரிஃப் பிளான்களின் விலையை விட அதிகமாகத்தான் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ இனிமேல் பிலைட் மோடு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Soon you will be able to browse internet make calls while flying : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X