Subscribe to Gizbot

இனி ஜியோ தேவையே இல்லை.. 2 பைசா விலை விகிதத்தில் டேட்டா.!

Written By:

முன்பொரு காலத்தில் 300எம்பி அளவிலான 2ஜி/3ஜி டேட்டாவை "பொத்திப்பொத்தி" பாதுகாத்து ஒரு மாதம் வரை பயன்படுத்துவோம். ஆனால், இப்போது நிலைமையே வேறு. நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 1ஜிபி முதல் அதிகபட்சமாக 5-6ஜிபி வரை பயன்படுத்துகிறோம்.

அப்படியாக, அதிக விலையிலான வைஃபை இணைப்பு கொண்டிருந்தும் உங்களுக்கு தேவையான தரவுப் பயன்பாடு கிடைக்கவில்லையா.? டேட்டா எல்லைக்கும் நீங்கள் கட்டுப்படுத்தப்படுகிறீர்களா.? கவலையை விடுங்க - உங்கள் உள்ளூர் தெரு விற்பனையாளர்கள் விரைவில் உங்கள் உதவ வருகிறார்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குறைந்த விலை வைஃபை டேட்டா தொகுப்பு

குறைந்த விலை வைஃபை டேட்டா தொகுப்பு

அதாவது எகானமிஸ்ட் டைம்ஸில் வெளியான ஒரு செய்தியின்படி, தரவு நுகர்வோர்கள் மிக விரைவில் ரூ.10/- என்ற விலை நிர்ணயத்தில் தொடங்கும் குறைந்த விலை வைஃபை டேட்டா தொகுப்புகளை வாங்க முடியும் என்று அறிவித்துள்ளது.

வைஃபை சேவை

வைஃபை சேவை

பப்ளிக் டேட்டா ஆபிஸ் (பொது தரவு அலுவலகங்கள் -PDO) என்பதை அறிமுகம் செய்து, பொதுமக்கள் ரூ.50,000/- அளவிலான வைஃபை சேவைகளை வழங்குவதன் மூலம் வைஃபை உபகரணங்களுக்கான இறக்குமதி வரி குறைத்தலை டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம் (டிராய்) பரிந்துரைத்துள்ளது.

பேண்ட் உரிமம்

பேண்ட் உரிமம்

மளிகை கடை மற்றும் தெருவோர கடைகளுக்கு இலவச ஐஎஸ்எம் (ISM -தொழில்துறை, அறிவியல் மற்றும் மருத்துவ) பேண்ட் உரிமத்தை வழங்கும் ஒரு சேவையை டெலிமாடிக்ஸ் அபிவிருத்தி மையம் (Centre for Development of Telematics : C-DoT) உருவாகியுள்ளது.

அலைபேசி பிராட்பேண்ட் சேவை

அலைபேசி பிராட்பேண்ட் சேவை

"டிஜிட்டல் இந்தியா என்ற கருத்தானது இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இல்லை என்றாலும் கூட பஞ்சாயத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் (PDO) மூலம் இந்த வைஃபை அலைபேசி பிராட்பேண்ட் சேவைகளை ரூ.10/-க்கு அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய அனுமதிக்கின்றது என்று டெலிமாடிக்ஸ் அபிவிருத்தி மையம் கூறியுள்ளது.

ஒடிபி

ஒடிபி

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பில்லிங் அமைப்போடு இணைந்து, மின்னாற்றல் இயக்க சாதனம் வைஃபை அணுகல் புள்ளியை இ-கேவ்வைசி (e-KYC) அல்லது ஒடிபி (OTP - ஒரு முறை கடவுச்சொல்) அங்கீகாரத்தின் கீழ் ரசீது பொதிகளுடன் வழங்கும்.

பாரத் ஹெவி எலக்ட்ரான்கள்

பாரத் ஹெவி எலக்ட்ரான்கள்

டெலிமாடிக்ஸ் அபிவிருத்தி மையமனது பிடிஓ (PDO) தொழில்நுட்பத்தை, பாரத் ஹெவி எலக்ட்ரான்கள் ஹிமாச்சல ஃபியூச்சரிடிக் கம்யூனிகேஷன்ஸ் உட்பட 20 உற்பத்தி பங்காளிகளுக்கு பகிர்ந்து கொள்ளவுள்ளது.

ரேடியோ ஸ்பெக்ட்ரம்

ரேடியோ ஸ்பெக்ட்ரம்

இதன் மூலம் சிறிய சில்லறை விற்பனையாளர்கள் 2.4 ஜிகாஹெர்ட்ஸ்(GHz) மற்றும் 5.8 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளின் கீழ் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய அதிர்வெண்களை பயன்படுத்தலாம். இது கட்டுப்பாட்டு அமைப்புகளிலிருந்து எந்த கட்டுப்பாடும் அல்லது தலையீடும் இல்லாமல் பயனர்கள் ரேடியோ ஸ்பெக்ட்ரம் அணுகலை பெற அனுமதிக்கும்.

இணைய சேவை

இணைய சேவை

மெய்நிகர் நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் (VNOs) கூட இந்த் சேவையில் நெட்வொர்க் ஆபரேட்டர்களாக சேரலாம். இந்தியாவின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) - "இத்தகைய நடவடிக்கைகளை பொது ஹாட்ஸ்பாட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, நாட்டில் இணைய சேவைகளை மிகவும் மலிவான விலையில் தரக்கூடியதாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளது.

வெறும் 2 பைசா

வெறும் 2 பைசா

2ஜி, 3ஜி மற்றும் 4ஜி போன்ற செல்லுலார் நெட்வொர்க்கில் உள்ள தரவுப் பயன்பாட்டிற்கு சராசரியாக 23 பைசாக்கள் என்ற விலை நிர்ணயத்தை நுகர்வோர்கள் செலுத்துக்கினறனர், ஆனால் இந்த சேவையின் கீழ் வைஃபை நெட்வொர்க்கில் ஒரு மெகாபைட் கட்டணம் 2 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று ரெகுலேட்டர் மதிப்பிட்டுள்ளது, அதாவது 23 பைசாவுடன் ஒப்பிடும் பொது வெறும் 2 பைசா என்ற விகிதத்தில் டேட்டா கிடைக்கும்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

இணைய சேவைகள் அதிகரிக்கும் என்பது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் இது கிராமிய அளவிலான தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதோடு, குறிப்பாக கிராமப்புறங்களில் வலுவான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் உதவுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இரவில் இண்டர்நெட் வேகம் குறைய நீங்கள் செய்யும் பிழைகள்தான் காரணம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Soon, you can buy Wi-Fi data vouchers from street vendors starting at Rs 10. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot