அங்க தொட்டு.. இங்க தொட்டு.. WhatsApp ப்ரொஃபைல் போட்டோவிற்கு வந்த AI அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப்பில் அடிக்கடி ப்ரொபைல் போட்டோவை மாற்றும் பழக்கம் உங்களுக்கு இருந்தால்.. வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோவிற்கு வரும் இந்த மாற்றம் உங்களை மேலும் குஷிப்படுத்தலாம். வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பிளாட்ஃபார்மில் ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோவை ( AI Generated Profile Photo) கொண்டுவருகிறது.
அதாவது கூடிய விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும், வாட்ஸ்அப்பிற்கு உள்ளயே ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோக்களை உருவாக்கி அதன் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை பெறுவார்கள். டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த லேட்டஸ்ட் விவரங்களின்படி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோ அம்சம் அணுக கிடைக்கிறது.

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்? இந்த புதிய ஏஐ ஜெனெரேடட் அம்சத்துடன் காணப்பட்ட பீட்டா வெர்ஷனில் உள்ள வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-ல் கிரியேட் ஏஐ ப்ரொபைல் போட்டோ என்கிற புதிய பகுதியை காணமுடிகிறது.அதன் வழியாக நீங்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் ஒரு ஏஐ ஜெனெரேடட் ப்ரோபைல் போட்டோவை உருவாக்கும் ஏஐ டூலை நீங்கள் பெறலாம்.
உங்கள் தேவையின் அடிப்படையில் கிடைக்கும் வரம்பற்ற விருப்பங்களின் கீழ் உங்களுடைய ஏஐ புகைப்படத்தை நீங்களே உருவாக்கலாம். இது பயனர்கள் தங்கள் உண்மையான படங்களை மறைப்பதற்கும், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த படங்களை ப்ரொபைல் போட்டோக்களாக பயன்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இதேபோல வாட்ஸ்அப்பிற்குள் அணுக கிடைக்கும் கேமராவிற்கான புதிய ஜூம் கண்ட்ரோல் அம்சமும் கூடிய விரைவில் சேர்க்கப்படவுள்ளது. இது வாட்ஸ்அப்பில் கேமராவை பயன்படுத்தும் போது ஜூம் அளவை சீராக சரிசெய்ய அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இந்த புதிய அம்சம் ஐஓஎஸ்-க்கான லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷனை (24.9.10.75) அப்டேட் செய்த சில பீட்டா டெஸ்டர்களுக்கு அணுக கிடைத்துள்ளது. வரும் நாட்களில் இது மேலும் பல யூசர்களுக்கு வந்துசேரலாம்.
கேமராவிற்கான ஜூம் கண்ட்ரோலை கொண்டுவருவதன் மூலம் கேமராவை செம்மைப்படுத்துவதில் வாட்ஸ்அப் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் வழியாகவே பயனர்கள் தங்களுக்கு பிடித்த தருணங்களை, பிடித்த மாதிரியாக படம்பிடித்து உடனடியாக ஷேர் செய்யவோ அல்லது ஸ்டேட்டஸ் வைக்கவோ முடியும்.
மேற்குறிப்பிட்ட அப்டேட்டில், வாட்ஸ் அப்பிற்கு யாரும் இந்த புதிய கேமரா ஜூம் கண்ட்ரோலிற்கான ஒரு புதிய பட்டனையும் காண முடிகிறது. இருப்பினும் இது பட்டனை அழுத்தி ஜூமிங் செய்வதற்கு பதிலாக ஸ்க்ரீனை டச் செய்வதன் மூலம் ஜூமை சரிசெய்ய முடியும்படி வேலை செய்கிறது. அதாவது வாட்ஸ்அப் கேமராவிற்கான இந்த புதிய ஜூம் கண்ட்ரோல் பட்டன் ஆனது ரெக்கார்டிங்கிற்கு இடையூறு இல்லாமல் ஜூமிங் செய்வதை எளிதாக்குகிறது.
வாட்ஸ்அப்பில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் புதிய அம்சம் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏஐ உதவுடன் போட்டோக்களின் பேக்கிரவுண்டை மாற்றுவது, மறுசீரமைப்புகளை செய்வது, இமேஜ் சைஸ்-ஐ எக்ஸ்பான்ட் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்து புகைப்படங்களை மேம்படுத்தும் அம்சங்கள் வாட்ஸ்அப்பிற்கு வருகிறது.
டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ வழியாக கிடைத்த அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டுக்கான லேட்டஸ்ட் பீட்டா அப்டேட் (வெர்ஷன் 2.24.7.13) ஆனது ஏஐ அடிப்படையிலான இமேஜ் எடிட்டருக்கான அடிப்படை குறியீட்டை கொண்டுள்ளது. இருப்பினும், இந்த அம்சம் இன்னுமும் உருவாக்கத்தில் உள்ளது. ஏனென்றால் இது பீட்டா புரோகிராமில் உள்ளவர்களுக்கு கூட டெஸ்டிங்கிற்காக அனுப்பி வைக்கப்படவில்லை.
வாட்ஸ்அப்பிற்கு வரும் இந்த புதிய ஏஐ இமேஜ் எடிட்டர் ஆனது ஏற்கனவே அனுககிடைக்கும் எச்டி ஐகானுக்கு அருகில், ஒரு பச்சை நிற ஐகானாக அணுக கிடைக்கும். அதன் கீழ் பேக்ட்ராப் (Backdrop), ரீஸ்டைல் (Restyle) மற்றும் எக்ஸ்பான்ட் (Expand) உள்ளிட்ட தேர்ந்தெடுக்கக்கூடிய விருப்பங்கள் அணுக கிடைக்கும். அந்த விருப்பங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான எடிட்டிங் திறன்களை கொண்டிருக்கும். இருப்பினும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த சரியான விவரங்கள் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








