Google-ல கூடிய சீக்கிரம் "இது" காணாமல் போய் விடும்; முடிஞ்சா யூஸ் பண்ணிக்கோங்க!

|

ஒருபக்கம், மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் விண்டோஸ் 8.1 ஓஎஸ்-ஐ இழுத்து மூடுவதாக அறிவித்ததோடு நில்லாமல், குறிப்பிட்ட ஓஎஸ்-ஐ பயன்படுத்தும் யூசர்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் விண்டோஸ் 10 ஓஎஸ்-க்கு அப்டேட் ஆக வேண்டும் என்கிற கெடுவையும் விடுத்துள்ளது.

மறுபக்கம் ஜூம் ஆப் ஆனது, ஆகஸ்ட் 2022 க்கு பிறகு க்ரோம்புக் லேப்டாப்களில் வேலை செய்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பிறகு க்ரோம்புக் யூசர்கள், ஜூம் சேவையை தொடர்ந்து பெற ஜூம் ஆப்பின் ப்ரொக்ரெஸிவ் வெப் ஆப்பை (Progressive Web App) பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

கூகுள் சேவையில் ஒரு மூடுவிழா!

கூகுள் சேவையில் ஒரு மூடுவிழா!

இப்படி எங்கு திரும்பினாலும் ஒரே மூடுவிழாவாக இருக்கும் நிலைப்பாட்டில், கூகுள் நிறுவனமும் அதன் தளத்தில் இருந்து ஒரு சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

அதென்ன சேவை? அது நிறுத்தப்பட என்ன காரணம்? குறிப்பிட்ட சேவைக்கு மாற்று கூகுள் தளத்திலேயே உள்ளதா? அல்லது "வெளியே தான்" செல்ல வேண்டுமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

'அவுட்' ஆகும் கூகுள் ஹேங்அவுட்ஸ்!

'அவுட்' ஆகும் கூகுள் ஹேங்அவுட்ஸ்!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதன் Hangouts சேவையை முழுவதுமாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம், கடந்த பிப்ரவரி மாதம், கூகுள் நிறுவனம் அதன் Hangouts ஆப்பிற்கு மாற்றாக புதிய Google Chat-ஐ அறிமுகம் செய்தது.

இந்நிலைப்பாட்டில் தான், அனைத்து Google Workspace யூசர்களையும் Google Chat க்கு நகர்த்தும் நோக்கத்தின் கீழ் கூகுள் நிறுவனம் அதன் ஹேங்அவுட்ஸ் சேவைக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ளது.

Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!

பேக்-அப் எடுக்க Google Takeout-ஐ பயன்படுத்திக்கொள்ளவும்!

பேக்-அப் எடுக்க Google Takeout-ஐ பயன்படுத்திக்கொள்ளவும்!

ஒருவேளை உங்களின் முக்கியமான உரையாடல்கள் அல்லது சாட்கள், ஹேங்அவுட்ஸில் உள்ளதென்றால், அதை பேக்-அப் எடுக்க விரும்பினால், கூகுள் டேக்அவுட்-ஐ பயன்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேக்-அப் எடுக்க விரும்புபவர்கள் நவம்பர் 2022 க்குள் அதை செய்ய வேண்டும். ஏனெனில் நிறுவனத்தின் கூற்றுப்படி, நவம்பர் 2022 க்கு பிறகு குறிப்பிட்ட சாட் டேட்டாவை உங்களால் டவுன்லோட் செய்ய முடியாது!

கூகுள் சாட்-க்கு மாறுவது எப்படி?

கூகுள் சாட்-க்கு மாறுவது எப்படி?

கூகுள் நிறுவனத்தின் ஒரு பிளாக்போஸ்டின் படி, Hangouts ஆனது வருகிற நவம்பர் 2022 இல் முற்றிலுமாக அகற்றப்படும். மேலும் டெஸ்க்டாப் மற்றும் மொபைலில் உள்ள யூசர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன்னதாக Google Chat-க்கு இடம்பெயரும்படியும் கேட்கப்படுவார்கள்.

மேலும் உங்களின் சாட் டேட்டா, ஹேங்அவுட்ஸ் பிளாட்பார்மில் இருந்து கூகுள் சாட்டில் இயல்பாகவே அணுக கிடைக்கும். ஒருவேளை நீங்கள் எல்லா ஹேங்அவுட்ஸ் டேட்டாவையும் பதிவிறக்கம் செய்ய விரும்பினால், அதற்கான விருப்பத்தையும் பெறுவீர்கள்.

எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே "இதை" செய்ங்க.. இல்லனா?

இனிமேல் Google Chat தான் எல்லாமே!

இனிமேல் Google Chat தான் எல்லாமே!

கூகுள் சாட் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு சேவையாக இருப்பதால், ஹேங்அவுட்ஸ்-ஐ இழப்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை.

கூகுள் சாட் ஆனது டாக்ஸ், ஸ்லைட்ஸ் அல்லது ஷீட்களை 'சைட்-பை-சைட் எடிட்டிங்' செய்ய அனுமதிக்கிறது. மேலும் க்ரூப்களும் டீம்களும் ஒரே இடத்தில் இருந்தபடி யோசனைகளை பகிரலாம், டாக்ஸ்-களில் வேலை செய்யலாம் மற்றும் ஃபைல்ஸ்-களையும் நிர்வகிக்கலாம்.

மேலும், இந்த கூகுள் சாட்-ஐ உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ், ஸ்பேஸஸ் மற்றும் மீட் ஆகியவற்றுடனும் சேர்த்து பயன்படுத்தலாம்.

Chat web app-ஐ இன்ஸ்டால் செய்யவும்!

Chat web app-ஐ இன்ஸ்டால் செய்யவும்!

மொபைலில் ஹேங்கவுட்ஸை பயன்படுத்துபவர்கள், ஜிமெயில் உள்ள சாட்டிற்கு அல்லது கூகுள் சாட்டிற்கு செல்லும்படி கேட்கும் ஒரு இன்-ஆப் ஸ்க்ரீனை பார்ப்பார்கள்.

இதேபோல், க்ரோம் யூசர்கள், வெப்பில் அணுக கிடைக்கும் சாட்டிற்கு செல்லும்படி அல்லது Chat web app-ஐ இன்ஸ்டால் செய்யும்படி கேட்கப்படுவார்கள்.

இப்படியாக வருகிற ஜூலை மாதத்திற்குள், ஹேங்கவுட்ஸ்-ஐ பயன்படுத்துபவர்கள் அனைவருமே கூகுள் சாட்டிற்கு மேம்படுத்தப்படுவார்கள்.

ஓ மை காட்! இந்த மேட்டர் தெரியாம இவ்ளோ நாள் Truecaller-ஐ யூஸ் பண்ணிட்டோமே!ஓ மை காட்! இந்த மேட்டர் தெரியாம இவ்ளோ நாள் Truecaller-ஐ யூஸ் பண்ணிட்டோமே!

முன்னதாக Google Talk.. இப்போது Hangouts!

முன்னதாக Google Talk.. இப்போது Hangouts!

நினைவூட்டும் வண்னம், Hangouts சேவையானது கடந்த 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது GChat-க்கான திட்டமிடப்பட்ட வாரிசாக இருந்தது. (GChat என்றதும் Google Chat என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். GChat என்றால் Google Talk ஆகும்)

GChat சேவை, இந்த மாத தொடக்கத்தில் தான் மூடப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டின் பிற்பகுதிக்குள் Hangouts சேவையம் அதே முடிவை சந்திக்க உள்ளது. அதன் பிறகு Google Chat ஆனது ஒரு தடையில்லாத ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Soon this Messaging Service From Google will disappear No more Hangouts Use Google Chat

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X