போச்சு! Google, Facebook & Amazon-ல் இழுத்து மூடப்படும் 7 சேவைகள்!

|

பால், மளிகை, வாடகை, இஎம்ஐ, பெட்ரோல் போன்றவைகளுடன் போராடும் பட்ஜெட் வாசிகளுக்கு மட்டுமே பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால்.. அது தவறு!

பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் கூகுள் (Google), பேஸ்புக் (Facebook), அமேசான் (Amazon) போன்ற பெரு நிறுவனங்களுக்கும் உண்டு!

ஏப்பா சாமி.. ரீல் அந்துப்போச்சு.. நீ கடைய சாத்து!

ஏப்பா சாமி.. ரீல் அந்துப்போச்சு.. நீ கடைய சாத்து!

எப்போதெல்லாம் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் சில சேவைகள் இழுத்து மூடப்படும்!

அதாவது ஒரு வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வோம்? அதை அப்படியே இழுத்து மூடி விடுவோம் அல்லவா?

அதுபோல அடுத்த சில மாதங்களில் (சில நாட்களில்).. கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் வழியாக அணுக கிடைக்கும் 7 சேவைகள் "இழுத்து மூடப்பட உள்ளன!"

Vodafone கஸ்டமர்களுக்கு நிரந்தர ஆபத்து! ஆன்லைனில் அம்பலமான அட்ரெஸ்கள்!Vodafone கஸ்டமர்களுக்கு நிரந்தர ஆபத்து! ஆன்லைனில் அம்பலமான அட்ரெஸ்கள்!

01. ஐஓடி கோர் சர்வீஸை (IoT Core service) இழுத்து மூடும் கூகுள்!

01. ஐஓடி கோர் சர்வீஸை (IoT Core service) இழுத்து மூடும் கூகுள்!

கூகுள் கிளவுட் (Google Cloud) சமீபத்தில் தனது ஐஓடி கோர் சேவையை நிறுத்துவதாக அறிவித்ததோடு நில்லாமல், வாடிக்கையாளர்களுக்கு அது தொடர்பான மின்னஞ்சல்களையும் அனுப்பி உள்ளது.

கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட கூகுளின் ஐஓடி கோர் ஆனது மில்லியன் கணக்கான டிவைஸ்களில் இருந்து டேட்டாவை கனெக்ட் செய்ய, மேனேஜ் செய்ய மற்றும் 'இன்ஜஸ்ட்' செய்யும் திறனை வழங்குகிறது.

இந்த சேவை வருகிற 2023 ஆம் ஆண்டு வரை அணுக கிடைக்கும் என்றாலும் கூட, இதன் கீழ் புதிய பயனர்கள் யாரும் இணைய முடியாது.

02. அமேசான் கேர் (Amazon Care) சேவையை இழுத்து மூடும் அமேசான்!

02. அமேசான் கேர் (Amazon Care) சேவையை இழுத்து மூடும் அமேசான்!

பிரபல இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்த ஆண்டு இறுதியோடு, அதன் அமேசான் கேர் சேவையை நிறுத்துகிறது.

அறியாதோர்க்ளுக்கு இந்த சேவை அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான உள் சுகாதாரப் பாதுகாப்புச் சலுகையாகும்.

"இந்த முடிவு உடனே எடுக்கப்பட்ட ஒன்றல்ல, பல மாதங்கள் கவனமாக பரிசீலித்த பின்னரே எடுக்கப்பட்டுள்ளது" என்று அமேசானின் மூத்த தலைவர்களில் ஒருவரான நீல் லிண்ட்சே கூறி உள்ளார்.

பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

03. Facebook அதன் கேமிங் ஆப்பை (Gaming app) இழுத்து மூடுகிறது!

03. Facebook அதன் கேமிங் ஆப்பை (Gaming app) இழுத்து மூடுகிறது!

அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பேஸ்புக் நிறுவனம் அதன் ஸ்டேண்ட்அலோன் கேமிங் ஆப்பை, வருகிற அக்டோபர் 28, 2022 அன்று இழுத்து மூடுகிறது!

குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, இந்த ஆப் ஆனது Google Play Store அல்லது Apple App Store-இல் அணுக கிடைக்காது மற்றும் இந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில், உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஐபோனில் "The app will no longer be available" என்கிற பேனரையே பார்ப்பீர்கள்.

04. ஒலிம்பியா கார்ப்-ஐ இழுத்து மூடும் மைக்ரோசாப்ட்!

04. ஒலிம்பியா கார்ப்-ஐ இழுத்து மூடும் மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Windows Enterprise பயனர்களுக்கான ப்ரோகிராம் ஆன 'ஒலிம்பியா கார்ப்' டெஸ்ட் லேப்-ஐ "மூடுவதாக" அறிவித்துள்ளது.

இது கடந்த 2017 ஆம் ஆண்டில் (ஒரு வகையான) "விண்டோஸ் இன்சைடர் லேப் ஃபார் எண்டர்பிரைஸ்" ஆக அறிமுகமானது. பின் 2018 ஆம் ஆண்டில், 'ஒலிம்பியா கார்ப்' என மறுபெயரிட்டது. தற்போது இந்த சேவை கைவிடப்படவுள்ளது!

பதட்டத்தில் Windows பயனர்கள்.. அடிச்சி புடிச்சி Uninstall பண்றாங்க! ஏன்?பதட்டத்தில் Windows பயனர்கள்.. அடிச்சி புடிச்சி Uninstall பண்றாங்க! ஏன்?

05. 'மேட் ஃபார் இந்தியா' கைசாலா சாட் ஆப்பிற்கும்.. ஆப்பு!

05. 'மேட் ஃபார் இந்தியா' கைசாலா சாட் ஆப்பிற்கும்.. ஆப்பு!

ஒலிம்பியா கார்ப் உடன் சேர்த்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 'மேட் ஃபார் இந்தியா' க்ரூப்-மெசேஜிங் சேவையான கைசாலாவையும் (Kaizala) அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு கைவிடுகிறது.

குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, இந்த சேவைக்கான ஆதரவு மற்றும் அணுகல் நிறுத்தப்படும். அதுவரை, தற்போதுள்ள கைசாலா வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இந்த சேவையைப் பயன்படுத்த முடியும், இருப்பினும் புதிய பயனர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள்!

06. ஜோடிகளுக்கான Tuned ஆப்பை இழுத்து மூடும் பேஸ்புக்!

06. ஜோடிகளுக்கான Tuned ஆப்பை இழுத்து மூடும் பேஸ்புக்!

ஜோடிகளுக்கான சோஷியல் ஆப் ஆன ட்யூன்ட், வருகிற செப்டம்பர் 19 அன்று 'ஷட் டவுன்' செய்யப்படுவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது!

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சேவை, Spotify உடனான ஒருங்கிணைப்பின் மூலம் நோட்ஸ், போட்டோஸ் மற்றும் வீடியோஸ், சேலஞ்சஸ், வாய்ஸ் மெசேஜஸ் மற்றும் ம்யூசிக் போன்றவைகளை - ஜோடிகளுக்கு இடையே - பரிமாறிக்கொள்ள உதவுகிறது!

ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் உயிரோட இருந்து.. இதை பார்த்து இருந்தா? எப்படி இருக்கும்?ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் உயிரோட இருந்து.. இதை பார்த்து இருந்தா? எப்படி இருக்கும்?

07. லைவ் ஷாப்பிங்-ஐ இழுத்து மூடும் பேஸ்புக்!

07. லைவ் ஷாப்பிங்-ஐ இழுத்து மூடும் பேஸ்புக்!

'ஷட் டவுன்' செய்யப்படும் மற்றொரு பேஸ்புக் சர்வீஸ் - அதன் லைவ் ஷாப்பிங் சேவையாகும். இந்த சேவை வருகிற அக்டோபர் 1, 2022 முதல் அணுக கிடைக்காது.

Best Mobiles in India

English summary
Soon These 7 Services From Google Facebook Amazon Microsoft to Shut Down.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X