போச்சு.. இந்த 30 போன்களில் 1 உங்களிடம் இருக்கா.. அப்போ அவ்ளோதான்.. WhatsApp சேவை கட்.. ஏன்? தப்பிக்க என்ன வழி?
கூடிய விரைவில் வாட்ஸ்அப் சேவைக்கான ஆதரவை இழக்கப்போகும் 30 மொபைல் போன்களின் பட்டியல் (List of 30 Mobile Phones To Lose WhatsApp Support Soon) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பழைய சாம்சங் (Samsung) மாடல்கள், பழைய மோட்டோ (Moto) மாடல்கள் மற்றும் பழைய ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) மாடல்கள் உட்பட பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஏன் இந்த திடீர் நடவடிக்கை? எந்தெந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்தப்போகிறது? இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:
பகுப்பாய்வு செய்யும் ஆன்லைன் தளமான ஸ்டேடிஸ்டாவின் கூற்றுப்படி, அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல்களை அப்கிரேட் செய்வதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் தங்கள் ஸ்மார்ட்போன்கள் உடைந்து, வேலை செய்யாமல் போகும்வரை அதை பயன்படுத்துகிறார்கள்.

உங்களிடமும் ஒரு பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், அதில் தான் நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஒருவேளை உங்கள் மொபைல் போன் ஆனது கூடிய விரைவில் வாட்ஸ்அப் சேவைக்கான ஆதரவை இழக்கலாம். கேனல்டெக்கின் சமீபத்திய அறிக்கையானது, 30 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டு, விரைவில் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று குறிப்பிட்டுள்ளது.
ஹூவாய் மற்றும் எல்ஜி போன்ற பிராண்டுகள் இந்தியாவில் தங்கள் போன்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டாலும் கூட, பலரும் இன்னுமும் இந்த பிராண்டுகளின் போன்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் புதிய ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேட் ஆகாத பட்சத்தில், அவர்களால் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும்.
வாட்ஸ்அப் மட்டுமல்ல, வேறு பல ஆப்களும் கூட மிகவும் பழைய ஸ்மார்ட்போன்களில் வேலை செய்ய முடியாத கொள்கைகளை கொண்டுள்ளன. ஆனால் வாட்ஸ்அப் சேவையின் கீழ் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளார்கள் என்பதால், வேறெந்த ஆப்களை விட, இதுபோன்ற கொள்கையின் கீழ் வாட்ஸ்அப் பயனர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாமல் போகும்? இதோ பட்டியல்:
1. சாம்சங் கேலக்ஸி ஏஸ் பிளஸ் (Samsung Galaxy Ace Plus)
2. சாம்சங் கேலக்ஸி எக்ஸ்பிரஸ் 2 (Samsung Galaxy Express 2)
3. சாம்சங் கேலக்ஸி நோட் 3 (Samsung Galaxy Note 3)
4. சாம்சங் கேலக்ஸி கோர் (Samsung Galaxy Core)
5. சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஸூம் (Samsung Galaxy S4 Zoom)
6. சாம்சங் கேலக்ஸி கிராண்ட் (Samsung Galaxy Grand)
7. சாம்சங் கேலக்ஸி எஸ்4 மினி (Samsung Galaxy S4 Mini)
8. சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி (Samsung Galaxy S3 Mini)
9. சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ் (Samsung Galaxy S4 Active)
10. மோட்டோ எக்ஸ் (Moto X)
11. மோட்டோ (ஜி Moto G)
12. ஐபோன் எஸ்இ (iPhone SE)
13. ஐபோன் 5 (iPhone 5)
14. ஐபோன் 6 (iPhone 6)
15. ஐபோன் 6எஸ் (iPhone 6S)
16. ஐபோன் 6எஸ் பிளஸ் (iPhone 6S Plus)
17. ஹூவாய் ஆசென்ட் ஜி525 (Huawei Ascend G525)
18. ஹூவாய் ஆசென்ட் பி6 எஸ் (Huawei Ascend P6 S)
19. ஹூவாய் ஜிஎக்ஸ்1எஸ் (Huawei GX1s)
20. ஹூவாய் சி199 (Huawei C199)
21. ஹூவாய் ஒய்625 (Huawei Y625)
22. லெனோவா ஏ858டி (Lenovo A858T)
23. லெனோவா 46600 (Lenovo 46600)
24. லெனோவா எஸ்890 (Lenovo S890)
25. லெனோவா பி70 (Lenovo P70)
26. சோனி எக்ஸ்பீரியா இ3 (Sony Xperia E3)
27. சோனி எக்ஸ்பீரியா இஸட்1 (Sony Xperia Z1)
28. எல்ஜி ஆப்டிமஸ் ஜி (LG Optimus G)
29. எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி (LG Optimus 4X HD)
30. எல்ஜி ஆப்டிமஸ் எல்7 (LG Optimus L7)


Click it and Unblock the Notifications








