ராடா - ஜீலை 5 முதல், விமான நிலையத்தில் உங்களைக் கனிவுடன் கவனித்துக் கொள்ளக் காத்திருக்கும் ரோபோ.!

மூன்று வகைப்படுத்தப்பட்ட வினாத் தொகுதிகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டு உள்ளது. “

|

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம், “விஸ்தாரா” என்னும் பெயரில் உள்நாட்டு விமான சேவையை வழங்கி வருகிறது. “விஸ்தாரா” என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு, “எல்லைகளற்று விரிதல்” எனப் பொருள் கொள்ளலாம். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை மையமாகக் கொண்டு செயல்படும் விஸ்தாரா, பயணிகளுக்கான தன்னுடைய சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய ரோபோ ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

ராடா:விமான நிலையத்தில் கனிவுடன் கவனித்துக் கொள்ளக் காத்திருக்கும் ரோபோ

இந்த ரோபோவுக்கு ராடா (RADA) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோவை உருவாக்குவதற்கு முக்கியப் பங்கு வகித்த, விஸ்தாராவின் தகவல் தொழில் நுட்பக் குழுவின் முதன்மை அதிகாரியைப் பெருமைப் படுத்துவதற்கு ஏற்ப, அவருடைய மகளின் பெயரான ராதாவைக் (Radha) குறிக்கும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ராடா:விமான நிலையத்தில் கனிவுடன் கவனித்துக் கொள்ளக் காத்திருக்கும் ரோபோ

ராடா – விமானப் பயணிகளின் தோழன்
நாம் பயணம் செய்யும் விமானம் குறித்த தகவல்கள், புறப்படும் நேரம், நம்முடைய விமானத்தில் ஏறுவதற்காகச் செல்ல வேண்டிய வாயில், கால நிலை இவற்றைப் பற்றிய தகவல்களோடு நமக்குப் பிடித்த திரைப்படம், நம்முடைய குழந்தைகளுக்குப் பிடித்தமான வீடியோ கேம்ஸ் ஆகிய வசதிகளோடு நமக்கு உதவி செய்வதற்காக இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
ராடா:விமான நிலையத்தில் கனிவுடன் கவனித்துக் கொள்ளக் காத்திருக்கும் ரோபோ

செயற்கை அறிவுத் தொழில் நுட்பம் (AI)
செயற்கை அறிவூட்டல் தொழில் நுட்பத்துடன் (AI) படைக்கப்பட்டுள்ள இந்த ராடா வருகின்ற ஜீலை 5 ஆம் தேதி முதல், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் “ஹாய்“ என்று நம்மை வரவேற்கக் காத்திருக்கும். உங்களுடைய பயணத்திற்கு வழங்கப்பட்ட அட்டையை ஸ்கேன் செய்தவுடன் உங்களுக்குத் தேவையான தகவல்களை ராடா வழங்கும். பயணிகள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த பதிலை ராடா வழங்கும். பயணிகளுக்கு வாழ்த்துக்களைக் கூறி, கைகளை மேலும் கீழும் ஆட்டிப் பேசி அவர்களுடன் உரையாடி, அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட பாதையில் உலா வரக் காத்திருக்கிறது ராடா.

மூன்று வகையான விசாரணைத் தொகுப்புகள்

மூன்று வகைப்படுத்தப்பட்ட வினாத் தொகுதிகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டு உள்ளது. “பாதுகாப்பான வினாத் தொகுதி” (Safest Set) என்னும் முதல் பகுதியில், பயணிகளின் விமானம் மற்றும் விமான நிலையத்தில் உள்ள சேவைகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் தரும். “பாதுகாப்பற்ற தொகுதி (Unsafe Set)” என்னும் இரண்டாவது பகுதியில், சூழ்நிலைகளுக்கு ஏற்ற கேள்விகளுக்குப் பதில் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக, “How are You”, “What are you doing” போன்ற கேள்விகளுக்கான பதில்களை ராடா வழங்கும். திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் குறித்த வேண்டுகோள்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் மூன்றாவது வினாத்தொகுப்புப் பகுதி உருவாக்கப்பட்டு உள்ளது.

ராடா:விமான நிலையத்தில் கனிவுடன் கவனித்துக் கொள்ளக் காத்திருக்கும் ரோபோ

17 வகையான பயன்பாடுகளுக்கு ஏற்ப மே்படுத்தத் திட்டம்

“இது ஒரு சோதனைக் கட்டம்தான். ரோபோவின் அறிவுப்பூர்வமான செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்டு அதனுடைய திறன் மேம்படுத்தப்படும். பயணிகளுக்கான சர்க்கர நாற்காலிகளை எடுத்துச் செல்லுதல், லக்கேஜ்களை எடுத்துச் செல்லல், வயதில் மூத்த குடிமக்களுக்கு உதவுதல் போன்ற 17 வகையான பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் ராடாவின் செயற்பாடுகள் மேம்படுத்தப்படும்” என்று கூறுகிறார், விஸ்தாராவின் தகவல் மற்றும் புத்தாக்கத்திற்கான முதன்மை அதிகாரி, ரவீந்தர் பால் சிங். அனைத்துக் கோணங்களிலும் சுழலும் வகையில் சக்கரங்கள் மேல் பொருத்தப்பட்டுள்ள ரோபாவால் ஓடுவதற்கும், நடப்பதற்கும், திரும்புவதற்கும் முடியும்.

Best Mobiles in India

English summary
Soon, a robot to assist air passengers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X