Home
News

புள்ள பூச்சிக்கு முளைச்ச கொடுக்கு.. Google-க்கு எதிராக PhonePe பார்த்த வேலை.. எல்லாம் Walmart இருக்குற தைரியம்

கடந்த பல வாரங்களாக ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி (ChatGPT) உடன் மல்லுக்கட்டுவதையே முழுநேர வேலையாக பார்த்து கொண்டிருக்கும் கூகுள் (Google) நிறுவனத்திற்கு, இன்னொரு பெரிய தலைவலியை கொடுக்கும்படியான ஒரு வேலையில் இறங்கியுள்ளது - டிஜிட்டல் பேமண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனமான போன்பே (PhonePe)!

"அதெப்படிங்க..? உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளுக்கு எதிராக போன்பே போன்ற நிறுவனத்தால் செயல்பட முடியும்?" என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் - இந்தியாவின் முக்கியமான ஃபின்டெக் (Fintech) நிறுவனங்களில் ஒன்றான போன்பேவிற்கு பின்னால் அமெரிக்க பன்னாட்டு வணிக நிறுவனம் வால்மார்ட் (Walmart) இருக்கிறது!

Google-க்கு எதிராக PhonePe பார்த்த வேலை.. Walmart இருக்குற தைரியம்!

அந்த தைரியத்தில் தான் இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்காக, போன்பே நிறுவனம் ஒரு சொந்த ஆப் ஸ்டோரை (App Store) அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதாவது கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) எதிராக போட்டியிடவும், பிளே ஸ்டோருக்கு சரியான மாற்றாக திகழவும் போன்பே முடிவு செய்துள்ளது.

டெக் க்ரன்ச்சால் (Tech Crunch) மதிப்பாய்வு செய்யப்பட்ட ஒரு உள் நிறுவன ஆவணத்தின்படி, போன்பே நிறுவனமானது வரவிருக்கும் அதன் சொந்த ஆப் ஸ்டோர் வழியாக தன் வாடிக்கையாளர்களின் சூழலுக்கு ஏற்றவாறு ஹைப்பர்-லோக்கலைஸ்டு சேவைகளை (Hyper-localised services), அதாவது உள்ளூர் மயமாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் போன்பேவின் ஆப் ஸ்டோரானது பன்மொழிகளுக்கான ஆதவரவையும் கொண்டிருக்கும். கிடைக்கப்பெற்ற தகவலின்படி இது 12 மொழிகளை ஆதரிக்கும்; உடன் 24x7 நேரலையில் இருக்கும் சாட் சப்போர்ட்டையும் (Chat Support) வழங்கும். இது "ஹை-குவாலிட்டி" யூஸர்களை பெற டெவலப்பர்களுக்கு உதவியாக இருக்குமென்றும் போன்பே நம்புகிறது.

ஏற்கனவே கூகுளின் கூகுள் பே (Google Pay) செயலியுடன் போட்டியிடும் போன்பேவின் இந்த புதிய ஆப் ஸ்டோர் முயற்சியானது - ஒரு ஆரம்பம் மட்டுமே ஆகும். ஏனென்றால், வெறுமனே ஒரு பேமண்ட் ஆப் (Payment App) ஆக இல்லாமல், அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்கிற முடிவுக்கு போன்பே எப்போதோ வந்துவிட்டது.

அதனொரு பகுதியாக, சியோமி (Xiaomi) போன்ற மொபைல் நிறுவனங்கள் உட்பட பல ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் உடனான கூட்டணி / ஒத்துழைப்புடன் அடுத்தடுத்த "வேலைகளையும்" பார்த்து வருகிறது. மேலும் போன்பே நிறுவனமானது பல ஓஇஎம்-களுடன் (OEM - Original Equipment Manufacturer) பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம் போன்பேவின் சொந்த ஆப் ஸ்டோர் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சில மாதங்களுக்குள் அது அனைத்து ஆண்ட்ராய்டு ஓஇஎம்-களிலும் (அதாவது இந்தியாவில் அறிமுகமாகும் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும்) இடம்பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. போன்பே நிறுவனத்தின் சொந்த ஆப் ஸ்டோர் ஆனது வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 450 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை (Registered Users) கொண்ட போன்பேவின் இந்த புதிய நடவடிக்கை, கூகுள் நிறுவனத்திற்கு நிச்சயம் ஒரு புதிய தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சமீபத்தில் இந்நிறுவனம் பின்கோட் (Pincode) என்கிற புதிய ஹைப்பர்-லோக்கல் ஆப்பை (Hyper-local App) அறிமுகம் செய்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

Best Mobiles in India

English summary
Soon PhonePe to Launch Its Own Android App Store To Compete With Google Play Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X