பணம் கட்டுங்க , வீடியோ பாருங்க, இது புதிய யூட்யூப் யுக்தி..!!
கூகுள் நிறுவனத்தின் பிரபல வீடியோ இணையதளமான யூட்யூப் பயன்படுத்த இனி பணம் கட்ட வேண்டும் என்றும், இம்முறை விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அனைத்து வீடியோக்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்காது என்றாலும் பதிவு செய்யப்பட்ட சில வீடியோக்களுக்கு மட்டும் பணம் செலுத்த நேரிடும் என தெரிகின்றது.

யூட்யூப் சேவையில் கட்டணம் செலுத்தும் முறைக்கான புதிய மென்பொருள்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதோடு, இந்த வீடியோக்கள் பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே தெரியும் என வெளியாக இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பல தகவல்கள் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறைந்த பட்ச கட்டணமாக ரூ.650 வரை இருக்கும். கட்டண வீடியோக்களை தவிர்த்து மற்ற வீடியோக்களை பயனாளிகள் தொடர்ந்து இலவசமாக பார்க்க முடியும் என்பதோடு கட்டணம் செலுத்தியவர்களுக்கு அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications