இது மட்டும் நடந்துட்டா.. அம்பானியை கையில் பிடிக்க முடியாதே.. Jio செய்யப்போகும் மகத்தான சாதனை!
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) சமீபத்தில் தனது முதல் காலாண்டு நிதியாண்டு முடிவுகளை அறிவித்தது. இந்நிறுவனத்தின் கூற்றுப்பதோ ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் தளம் இப்போது 498 மில்லியனாக இருக்கிறது.
அதாவது இது 500 மில்லியனை தொட இன்னும் 2 மில்லியன் மட்டுமே உள்ளது. இந்த அளவிலான சந்தாதார்கள் தளத்தை வேறு எந்த இந்திய டெலிகாம் நிறுவனமும் தொட்டதில்லை. ஆக இதுவொரு மகத்தான சாதனையாக இருக்கும். இன்னும் வெளிப்படையாக ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் - ஜியோவை தவிர வேறு எந்த நிறுவனமும் 400 மில்லியன் வாடிக்கையாளர்களை தொட்டதில்லை.

ஜியோ நிறுவனத்தின் சப்ஸ்க்ரைப்ர் சர்ன் ரேட் (Subscriber churn rate) ஆனது 1.8% ஆக உள்ளது. இதன் பொருள், ஜியோவின் சேவையின் கீழ் அதிகபட்ச வாடிக்கையாளர்கள் நீடிக்கிறார்கள் என்று அர்த்தம். முதல் காலாண்டில், ஜியோ மொத்தம் 9.9 மில்லியன் பயனர்களை சேர்த்துள்ளத். இந்திய சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப விலை நிர்ணய விளையாட்டையும் கூடவே அதன் சேவைகளின் விநியோகத்தையும் சரியாக கையாள்வதால் - இது சாத்தியமாகி உள்ளது
500 மில்லியன் என்கிற மைல்கல் 2025 ஜூலை மாதத்தில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த காலாண்டு முடிவுகள் ஜியோ 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது என்பதை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஜியோவின் இந்த வளர்ச்சி ஆனது ஒரு பயனருக்கு சராசரி வருவாய் (ARPU) வளர்ச்சியுடன் சேர்ந்து வருகின்றன.
ஜியோவின் ஏஆர்பியு இப்போது ரூ.208.8 என்பதை எட்டியுள்ளது. இது தொழில்துறையில் இரண்டாவது அதிகபட்சமாகும். ஆகிய கூடிய விரைவில் இது ரூ.250 ஆக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இது நிறுவனத்தின் வருவாயை பெருமளவில் அதிகரிக்கும். ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது அதன் போட்டியாளரான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை விட குறைந்த விலையில் உள்ளன.
இதன் மூலமே இந்நிறுவனம் அதிக பயனர்களை விரைவாக சேர்க்கிறது. அதாவது ஜியோ அதன் ஒவ்வொரு பயனரிடமிருந்தும் ஏர்டெல் நிறுவனத்தை விட சற்று குறைவாகவே சம்பாதித்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பெரும் வருவாயை ஈட்டுகிறது. ஜூன் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 24.8% அதிகரித்து ரூ.7,110 கோடியாக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜியோ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த 2 வகையான அன்லிமிடெட் சலுகையை (Unlimited Offer) நீட்டித்து உள்ளது. ஒன்று - ரூ.299 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 90 நாட்கள் வரையிலாக கிடைக்கும் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு ப்ரீபெய்டு பயனராக இருந்தால் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1.5 ஜிபி டேட்டாவை உள்ளடக்கிய திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். போஸ்ட்பெய்டு பயனராக (புதிய வாடிக்கையாளர்கள் அல்லது தங்கள் திட்டத்தை மாற்றுபவர்கள் உட்பட) இருந்தால் மாதத்திற்கு ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
மேலும் உங்களுடைய ரீசார்ஜ் 28 - 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றால் உங்களுக்கு 1 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். உங்களுடைய ரீசார்ஜ் 28 - 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றால் உங்களுக்கு 2 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். ஒருவேளை உங்களுடைய ரீசார்ஜ் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றால் உங்களுக்கு 3 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.
இதேபோல ரூ.500 திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையுடன் ஜியோஃபைபர் அல்லது ஏர்ஃபைபரின் 50 நாள் இலவச சோதனை சலுகையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் நீங்கள் 50 நாள் இலவச ஹோம் இண்டர்நெட் சோதனையை நீங்கள் முயற்சி செய்யலாம். தகுதியுள்ள ஜியோ ப்ரீபெய்ட்/போஸ்ட்பெய்ட் பயனர்கள் 50 நாட்களுக்கு ஜியோஃபைபர் அல்லது ஜியோஏர்ஃபைபரின் இலவச சோதனையை பெறுவார்கள்


Click it and Unblock the Notifications








