பாஸ்போர்ட் வழியாக UPI பேமண்ட்.. NPCI-யின் புதிய வசதி.. இனி பணம், பேங்க் கார்டுகள் வேண்டாம்!
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமண்ட் சேவைகளின் (Digital Payment Services) ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) பயணிக்கும் இந்தியர்கள் ரொக்கம் (Cash) மற்றும் பேங்க் கார்டுகளை (Bank Cards) எடுத்து செல்ல வேண்டிய அவசியமின்றி தங்கள் பாஸ்போர்ட்களை (Passports) வைத்து யுபிஐ வழியாக பணம் செலுத்தும் (UPI Payment) வசதி விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
துபாயில் உள்ள இந்திய தூதர் (India Consul General) ஆன ஜெனரல் சதீஷ் குமார் சிவன் (Satish Kumar Sivan), இன்று (ஜூலை 10) நடைபெற்ற யுபிஐ எக்ஸ்பாஷன் நிகழ்வில் (UPI expansion event) பாஸ்போர்ட் வழியிலான யுபிஐ பேமெண்ட் குறித்த திட்டத்தை அறிவித்தார்.

விரைவில் யுபிஐ ஆனது முக்கிய அடையாள மற்றும் பைனான்ஷியல் கிரென்ட்ஷியல் (Key Identity and financial credentials) ஆக மாறும் என்றும், இந்தியாவில் இருந்து வருபவர்கள் இந்திய வங்கி கணக்குகளிலிருந்து (Indian Bank Accounts) பணம் அல்லது கார்டுகள் இல்லாமல் நேரடியாக பணம் செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
"அனைத்து கட்டண மற்றும் அடையாள செயல்பாடுகளும் யுபிஐ உடன் ஒன்றிணைக்கப்படும்" என்றும் சிவன் கூறினார். இந்த முயற்சி ஒரு முன்னேற்ற பணியாகும். அதாவது இதற்கான காலக்கெடுவையோ அல்லது தொழில்நுட்ப விவரங்களையோ அவர் குறிப்பிடவில்லை. ஆனால் எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்குவதே இந்த திட்டத்தின் குறிக்கோள் என்று மட்டும் கூறியுள்ளார்.
யுபிஐ சேவையை ஏற்றுக்கொள்ளலுக்காக, லுலு (Lulu) மற்றும் துபாய் டியூட்டி ஃப்ரீ (Dubai Duty Free) உள்ளிட்ட முக்கிய யுஏஐ ரீடெய்ல் விற்பனையாளர்களை, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India - NPCI) ஏற்கனவே இணைத்துள்ளது. இந்திய வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட கொள்முதல்களை முடிக்க, வாங்குபவர்கள் தங்களுக்கு பழக்கமான மொபைல் ஆப்களை பயன்படுத்தலாம்.
இதற்கு அடுத்த கட்டமாக, யுபிஐ மற்றும் உள்ளூர் கட்டண நெட்வொர்க்குகளை ஒத்திசைக்க யுஏஇ-யின் ஏஏஎன்ஐ (AANI) அமைப்புடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை நிதி இணைப்பை வலுப்படுத்தும் என்றும் யுஏஇ-ல் உள்ள இந்தியர்கள் எதிர்கொள்ளும் பேமண்ட் தொடர்பான சிக்க்கல்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் என்ஆர்ஐ-கள் (NRI) இப்போது தங்கள் சர்வதேச மொபைல் எண்களை (International Mobile Number) பயன்படுத்தி, இந்தியாவில் யுபிஐ சேவை வழியாக பணம் செலுத்தலாம் என்றும் இனி அவர்களுக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த இந்திய சிம் கார்டு (Indian SIM Card) தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது
அதாவது இப்போது என்ஆர்ஐ-க்கள் கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) போன்ற பயன்பாடுகளை பயன்படுத்தி இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு இந்தியரையும் போலவும் பணம் அனுப்பலாம். கடந்த ஜனவரி 2023 இல், சர்வதேச மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட என்ஆர்இ (NRE) அல்லது என்ஆர்ஓ (NRO) அக்கவுண்ட்களை வைத்திருக்கும் என்ஆர்ஐ-களுக்கு ஆர்பிஐ ஆனது யுபிஐ அணுகலை (RBI Allows UPI Access) அனுமதித்தது.
அதனை தொடர்ந்து - இந்த கொள்கை வங்கிகள் மற்றும் பேமண்ட் ஆப்களால் செயல்படுத்தப்பட்டது. இந்த அம்சத்தை முழுமையாக அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி - ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) ஆகும். ஜூன் 25, 2025 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் வெளிநாட்டு மொபைல் எண்களை பயன்படுத்தி தங்கள் அக்கவுண்ட்களை யுபிஐ ஆப்களுடன் இணைக்க முடியும் (NRI Accounts can Link With UPI Aps) என்பதை ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் உறுதிப்படுத்தியது.


Click it and Unblock the Notifications








