Home
News

கியாஸ் சிலிண்டர் பணத்தை ஆன்லைனில் செலுத்த புதிய ஏற்பாடு.!

பின்பு சிலிண்டர் வினியோகஸ்தர்கள் சிலிண்டர்குரிய பணத்துடன் அவர்கள் எடுத்துக் கொண்டு வந்ததற்கு மறைமுக சேவை கட்டணமாக கூடுதல் பணமும் பெறுகின்றனர்.

By Prakash S

சமையல் எரிவாயு கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள், மேலும் இப்போது ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கேஸ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது.

கியாஸ் சிலிண்டர் பணத்தை ஆன்லைனில் செலுத்த புதிய ஏற்பாடு.!

தற்சமயம் எண்ணெய் நிறுவணங்கள் சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் மாற்றியமைத்து வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து இன்று நாடு தழுவிய பாரத் பந்த கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல சர்சை

பல சர்சை

மேலும் நமது வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக
பணம் பெறப்படுகிறது, இந்நிலையில் இந்த நேரடியாக பணம் பெறும் சேவை முறையால் பல சர்சைகள் மற்றும் பல குற்றங்களை
தெரிவித்து வந்தனர்.

சிலிண்டர் வினியோகஸ்தர்கள்

சிலிண்டர் வினியோகஸ்தர்கள்

பின்பு சிலிண்டர் வினியோகஸ்தர்கள் சிலிண்டர்குரிய பணத்துடன் அவர்கள் எடுத்துக் கொண்டு வந்ததற்கு மறைமுக சேவை கட்டணமாக கூடுதல் பணமும் பெறுகின்றனர். இது குறித்து புகார்கள் எண்னை நிறுவணத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

இ-வேலட்

இ-வேலட்

இந்நிலையில் அதை தடுக்கவே இ-வேலட் எனப்படும் புதிய ஆன்லைன் பணம் பரிவர்தனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்
நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி சிலிண்டர் புக் செய்யும் போது அதற்குரிய பணத்தை ஆன்லைனில் செலுத்தமாறு தகவல் அனுப்பப்படுகிறது. அதை ஒரு சில வினியோகஸ்தர்கள் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றனர். அனைவரும்
அதை நடைமுறைப்படுத்தவில்லை. குறிப்பாக இது பெயரளவில் மட்டுமே உள்ளது எனவே அதை விரைவில் கட்டாயமாக்க எண்ணை நிறுவனம் நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை

ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை

சில சிலிண்டர் வினியோகஸ்தர்கள் கூறுவது என்னவென்றால், பல வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை விரும்பவில்லை. இதன் மூலம் கூடுதலாக பணம் எடுத்து விடுவார்களோ என அஞ்சுகின்றனர். அதே நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்பதாகவும் எங்களிடம் புகார் செய்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

பயிற்சி

பயிற்சி

பின்பு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் பணம் உடனடியாக கிடைப்பதில்லை. இடையில் விடுமுறை
நாட்கள் வந்து விட்டால் போதும் தங்களது கணக்கில் வந்து சேர 2 அல்லது 3நாள் ஆகிறது என்ம் தெரிவிக்கினர். எனவே இந்தியன் ஆயில் எண்ணை நிறுவனம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறையை விரைவில் கட்டாயப்படுத்துகிறது. இதற்குவேண்டி சிலிண்டர் வினியோகஸ்தர்களுக்கும், டெலிவரி செய்யம் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How to control your PC or Mac using iPhone or Android smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X