Home
News

உடல்நலக்குறைவை கண்டறியும் புதிய மொபைல்போன் அப்ளிகேஷன்!

By Super
உடல்நலக்குறைவை கண்டறியும் புதிய மொபைல்போன் அப்ளிகேஷன்!

மூச்சுக் காற்றை வைத்து, உடல்நலக் குறைவை கண்டுபிடிக்கும் புதிய மொபைல்போன் அப்ளிகேஷனை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த அப்ளிக்கேஷனுக்கு கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி குளுவினர், சென்ஸாரி ஆஃப் வேப்பர் டெக்னாலஜி என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர்.

இதில் ஒருவரது சுவாசத்தினை வைத்து, உடல்நலத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறியும் புதிய வசதியினை அளிக்க உள்ளனர். இந்த அப்ளிக்கேஷனை எலக்ட்ரானிக் நோஸ் என்றும் கூறலாம். ப்யூட்டனல் போன்ற வேதியல் பொருட்களின் மூலம் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மருத்துவரிடம் செல்லுவதற்கு முன்பு என்ன உடலில் பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு அது சம்மந்தமான மருத்துவரிடம் அணுக இந்த அப்ளிக்கேஷன் பெரிதும் உதவும். இன்னும் சில பேர் நினைக்கலம், இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்துவதற்கு மருந்துவரிடம் நேராகவே சென்று கேட்டு விடலாமே என்று.

ஆனால் பொதுவாக உடலில் ஏற்படும் பிரச்சனைகளை குழந்தைகளுக்கு சொல்ல தெரியாது. இதனால் இந்த அப்ளிக்கேஷன் குழந்தைகளின் உடல்நல குறைபாடுகளை தெரிந்து கொள்ள மிக உபயோகமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இந்த அப்ளிக்கேஷனை உருவாக்குவதற்கான சோதனை முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த முயற்சி வெற்றிகரமானதாக முடிந்துவிட்டால், மக்களுக்கு மிக பயனுள்ள அப்ளிக்கேஷன் தயாராகிவிடும். இந்த அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் எளிதாக பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X