ரூ.55,990க்கு சோனி எக்ஸ்பீரியா இசட்3+ வெளியானது
ஜப்பான் நாட்டை சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான சோனி சத்தமில்லாமல் புதிய வகை ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. புதிய சோனி எக்ஸ்பீரியா இசட்3+ IPX5 / IPX8 ரேட்டிங் கொண்டிருப்பதால் தூசி மற்றும் தண்ணீர் பட்டால் எதுவும் ஆகாது எந்பதோடு அதிகளவு துள்ளியமான சத்தத்தை வழங்கும்.
இவரு பெரிய கப்பல் வியாபாரி, விளம்பரம் கொடுக்குறாரு..!
இதோடு க்ரோம் எட்ஜ் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ட் கேப் வழங்கப்பட்டுள்ளதோடு இந்நிறுவனத்தின் சைபர்ஷாட் தொழில்நுட்பம் துள்ளியமான புகைப்படங்களை எடுக்க வழி செய்கின்றது.
இது யார்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி !
டூயல் சிம் கொண்டிருக்கும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3+ ஸ்மார்ட்போன் குறித்த பல தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

டிஸ்ப்ளே
5.2 இன்ச் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் லைவ் கலர் எல்ஈடி மற்றும் எக்ஸ் ரியால்டி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்
எக்ஸ்பீரியா இசட்3+ கருவியானது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் 3ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா
கேமராவை பொருத்த வரை 20.7 எம்பி ப்ரைமரி கேமரா, எக்ஸைமோஸ் ஆர்எஸ் சென்சார், 4கே வீடியோ பதிவு செய்யும் வசதி, மற்றும் 5.1 எம்பி முன்பக்க கேமராவும் 25 எம்எம் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி LTE, 3ஜி HSPA+, வை-பை b/g/n ac MIMO, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் GLONASS, MHL, என்எஃப்சி, ஆகியை வழங்கப்பட்டுள்ளதோடு 2930 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

இயங்குதளம் மற்றும் விலை
தற்சமயம் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மூலம் இந்த கருவியில் ஆண்ட்ராய்டு எம் அப்டேட் வழங்கப்படுவதோடு இதன் விலை ரூ.55,950 முதல் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications
