தலைசிறந்த கேமராவுடன் சோனி எக்ஸ்பீரியா XZ இந்தியாவில் அறிமுகமானது!!
சோனி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் கருவியினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பீரியா XZ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா தளத்தில் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இணையதளம் இல்லாமல் மற்ற சில்லறை விற்பனையாளர்களிடமும் இந்தக் கருவி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி நிறுவனத்தின் படி எக்ஸ்பீரியா XZ கருவியின் கேமரா மகிச் சிறப்பான புகைப்படங்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பிரைமரி கேமராவில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவை புகைப்படங்களை அதிக தரத்துடன் மிகத் துல்லியமாக வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சத்திலும் அதிக நிறம் கொண்ட புகைப்படங்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 எம்பி வைடு-ஆங்கிள் செல்பீ கேமராவில் வழங்கப்பட்டுள்ளது மற்ற ஃபிளாக்ஷிப் கருவிகளை விட 2.6 மடங்கு பெரியது என்றும் சோனி தெரிவித்துள்ளது. வழக்கமான சோனி கருவிகளைப் போன்று இந்தக் கருவியிலும் IP68 சான்று பெற்றிருக்கும் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் யுனிட், இரு சிம் கார்டுகளுக்கும் 4 ஜிபி வோல்ட்இ மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் சிங்கிள் சிம் கொண்ட கதருவியில் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 820 மூலம் சக்தியூட்டப்பட்ட எகர்ஸ்பீரியா XZ கருவியானது 3ஜிபி ரேம் மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் 2900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டுள்ளது.
இத்தனை அம்சங்கள் கொண்ட சோனி XZ கருவியின் விலை ரூ.51,990 மற்றும் சிறப்பு விலை ரூ.49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இந்தக் கருவிகளை முன்பதிவு செய்து ரூ.8,990 மதிப்புடைய சோனி SWR30 ஸ்மார்ட்பேன்ட் கருவியினை முற்றிலும் இலவசமாகப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications