சோனி எக்ஸ்பீரியா : கனவில் கூட நினைக்காத விலை குறைப்பு
சோனி இந்தியா நிறுவனம் தன் வாடிக்கையாளர்கள் கனவில் கூட நினைத்து பார்த்திடாத விலைக்கு குறைப்பை நிகழ்த்தியுள்ளது. அதிரடியான விலைக் குறைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
சோனி நிறுவனத்தின் பிளாக் ஷிப் ஸ்மார்ட் போன்களான சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் மற்றும் எக்ஸ்பீரியா இசெட்5 பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் :
ரூ.48,990 என்ற விற்பனை விலையில் தொடங்கப்பட்ட சோனி எக்ஸ்பீரியா எக்ஸ், 10 ஆயிரம் ரூபாயோ விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ 38,990/-திற்கு கிடைக்கிறது.

எக்ஸ்பீரியா இசெட்5 பிரீமியம் :
மறுபுறம், கடந்த ஆண்டு பிளாக் ஷிப் ஸ்மார்ட்போனான எக்ஸ்பீரியா இசெட்5 பிரீமியம் ரூ.55,990 என்ற விலையில் அறிமுகமானது இப்போது விலை குறைக்கப்பெற்று ரூ.47,990/-க்கு கிடைக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அம்சங்கள் :
ஆண்ட்ராய்டு, 6.0.1 மார்ஷ்மெல்லோ, யூஐ ஸ்கின் லேயர், 5 இன்ச் புல் எச்டி (1080x1920 பிக்சல் தீர்மானம்) ஹெக்ஸா கோர் குவால்காம் ஸ்னாப் 650 ப்ராசஸர், 3ஜிபி ரேம், அட்ரெனோ 510 ஜிபியூ.

பேட்டரி :
64ஜிபி வரையிலான உள்ளடக்க மெமரி, உடன் 200 ஜிபி வரை மைக்ரோ கார்ட் விரிவாக்கம், எக்ஸ்மோர் ஆர் சென்சார், ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 23எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. அதே எக்ஸ்மோர் ஆர் சென்சார் கொண்ட 13எம்பி முன்பக்க கேமிரா, 2620எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜ் 2.0.

இணைப்பு வசதி :
4ஜி, எல்டிஇ, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, என்எப்சி மற்றும் மைக்ரோ யூஎஸ்பி இணைப்பு.

எக்ஸ்பீரியா இசெட்5 பிரீமியம் அம்சங்கள் :
4கே ரெசெல்யூஷன் டிஸ்ப்ளே, 2160x3840 பிக்சல் தீர்மானம் கொண்ட 5.5-அங்குல 4கே டிஸ்ப்ளே 3ஜிபி ரேம், உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு 32 ஜிபி, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 அக்டா கோர் ப்ராசஸர், மைக்ரோ கார்ட் வழியாக 200ஜிபி வரை நீட்டிப்பு, பாஸ்ட் சார்ஜர் 2.0, வெறும் 10 நிமிட சார்ஜ் 5.5 மணி நேர பயன்பாட்டை வழங்கும்.

மேலும் படிக்க :
கையில் வெடித்துச் சிதறிய ஜியோ ஸ்மார்ட்போன்.!!
சியாமி மிநோட் 2 ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல்கள்..!


Click it and Unblock the Notifications








