அணிவகுக்கும் சோனியின் ஆன்ட்ராய்டு சாதனங்கள்

By Karthikeyan
|
அணிவகுக்கும் சோனியின் ஆன்ட்ராய்டு சாதனங்கள்

பெர்லினில் நடைபெற்று வரும் ஐஎப்எ நிகழ்வில் சோனியின் தயாரிப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் இந்த முக்கிய நிகழ்வில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

குறிப்பாக 3 எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களையும் ஒரு எக்ஸ்பீரிய டேப்லெட்டையும் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் முறையே எக்ஸ்பீரியா டி, எக்ஸ்பீரியா வி மற்றும் எக்ஸ்பீரியா ஜே என்று பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. அதுபோல் சோனியின் புதிய டேப்லெட்டிற்கு எக்ஸ்பீரியா டேப்லெட் எஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன.

இந்த 4 சாதனங்களும் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குகின்றன. எக்ஸ்பீரியா டி மற்றும் வி ஆகிய ஸ்மார்ட்போன்கள் 720 பிக்சல்கள் கொண்ட எச்டி திரையைக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் ஒரு டூவல் கோர் 1.5 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 13எம்பி பின்பக்க கேமரா உள்ளன.

ஆனால் டி ஸ்மார்ட்போன் 4.6 இன்ச் டிஸ்ப்ளேயையும் அதே நேரத்தில் வி ஸ்மார்ட்போன் 4.3 இன்ச் டிஸ்ப்ளேயையும் கொண்டுள்ளன. எக்ஸ்பீரியா ஜே போனைப் பார்த்தால் அது 4 இன்ச் அளவில் எப்டபுள்யுவிஜிஎ டிஸ்ப்ளே மற்றும் 5எம்பி கேமராவுடன் வருகிறது.

எக்ஸ்பீரியா டேப்லெட் எஸ் அசத்தலான் அம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் 9.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் என்விடியா டேக்ரா 3 சிப்செட்டுடன் வருவதால் இதன் இயங்கு வேகம் அருமையாக இருக்கும் என்று நம்பலாம்.

சோனியின் மேற்சொன்ன சாதனங்களும் இன்னும் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X