சோனி எக்ஸ்பீரீயாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஓ ஸ்மார்ட்போன்

By Siva
|

ஆண்ட்ராய்டு ஓ ஓஎஸ் வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட்போனை சோனி எக்ஸ்பீரியா வெளியிடும் பெருமையை பெற வாய்ப்புள்ளதாக முன்னணி டெக்னாலஜி செய்தி நிறுவனம் ஒன்று தகவலை கசிய வைத்துள்ளது. இந்த தகவலை சோனி நிறுவனம் உறுதி செய்யவில்லை என்றாலும் இந்த வதந்தி உண்மையாக அதிக வாய்ப்புள்ளதாக டெக்னாலஜி வட்டாரங்கள் கூறுகின்றன

சோனி எக்ஸ்பீரீயாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஓ ஸ்மார்ட்போன்

சோனி எக்ஸ்பீரியாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஓ ஸ்மார்ட்போனின் மாடலுக்கு G8441 என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போனில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4GB ரேம், 32G இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 720P டிஸ்ப்ளேவை கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல டெக்னாலஜி ஆய்வாளர்கள் இந்த போன் குறித்த தகவல்களை நம்பிக்கையுடன் வெளியேற்றி வருவதால் விரைவில் வாடிக்கையாளர்களின் கைகளில் இந்த மாடல் போன் தவழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனி எக்ஸ்பீரியாவின் காம்பாக்ட் மாடலின் அடுத்த வடிவமாகத் தான் இந்த மாடல் இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. இந்த போனில் 1080P ரெசலூசன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இதன் மூலம் காணப்படும் வெப் பக்கங்கள் புதிய அனுபவத்தை கொடுக்கும்

கடந்த ஆண்டு வெளியான சோனி எக்ஸ்பீரியாவின் காம்பாக்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 650 சிப்செட்டுடன் வெளிவந்த நிலையில் இந்த புதிய மாடல் இதன் அடுத்த வடிவமாக இருந்தால் அதேபோன்று உயர்வகை டெக்னாலஜியுடன் சிறிய வடிவத்தில் காணப்படும். ஒருவேளை மாறுபட்டு இருக்குமானால் சோனி வாடிக்கையாளர்களை முழு அளவில் திருப்தி செய்யும் வகையில் இந்த புதிய மாடல் இருக்கும் என்று கூறப்படுகிறது

எந்த வகையான மாடலாக இந்த ஆண்ட்ராய்ட் ஓ ஸ்மார்ட்போன் இருந்தாலும் இதில் கண்டிப்பாக ஆண்ட்ராய்ட் 8.0 அம்சம் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த ஒரு விஷயமே இந்த மாடல் அனைத்து மாடல்களுக்கும் முன்னோடியாகவும், வித்தியாசம் நிறைந்ததாகவும் இருக்க தகுதி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Sony Xperia rumored to be working on a device that will have Android O out of the box.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X