சோனி எக்ஸ்பீரியா எம்4 அக்வா இந்தியாவில் வெளியானது
சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா எம்4 அக்வா ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.24,990க்கு வெளியிட்டது. தற்சமயம் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் சோனி சென்டர் மற்றும் பல முன்னணி மின்சாதன கடைகளில் கிடைக்கின்றது.
இன்றைய ஸ்மார்ட்போன்களில் இல்லாத 'அந்த கால' சிறப்பம்சங்கள்
எக்ஸ்பீரியா எம்4 டெம்பர்டு கிளாஸ் டிளாஸ் டிஸ்ப்ளே, 136ஜி வாட்டர் ப்ரூஃப் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 5 இன்ச் 720பி ஹெச்டி டிஸ்ப்ளே, 64-பிட் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர் 4ஜி LTE மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, சோனியின் எக்ஸ்மோர் ஆர்எஸ் மொபைல் சென்சார் 2.0 அப்ரேச்சர், 3200 ஐஎஸ்ஓ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி டிஜிட்டல் காம்பாக்ட் கேமரா தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதோடு சூப்பர் ஆட்டோ மோடு, மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் சூப்பர்- வைடு ஆங்கிள் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள் - அப்படி இதுல என்ன தான் இருக்கு?
பேட்டரியை பொருத்த வரை சோனி நிறுவனம் இரண்டு நாள் நீடிக்கும் பேட்டரி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டரி ஸ்டாமினா மோடு மற்றும் அல்ட்ரா ஸ்டாமினா மோடு கருவியின் பேட்டரியை மேலும் சில நாட்களுக்கு இயங்க வழிவகுக்கும் என்றும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications