இது சோனி எக்ஸ்பீரியா பாஸ்: இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்- 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே, டிரிபிள் 12எம்பி சோனி கேமரா!

|

ஓஎல்இடி டிஸ்ப்ளேக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு சோனி எக்ஸ்பீரியா 10 IV மற்றும் சோனி எக்ஸ்பீரியா 1 IV ஸ்மார்ட்போன்களை சோனி அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி எக்ஸ்பீரியா 1 IV ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 சிப்செட் ஆதரவோடு வருகிறது. அதேபோல் சோனி எக்ஸ்பீரியா 10 IV ஸ்மார்ட்போனானது 6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. சோனி எக்ஸ்பீரியா 1 IV ஸ்மார்ட்டிவியானது 4கே ஓஎல்இடி 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது.

சோனி எக்ஸ்பீரியா 10 IV மற்றும் சோனி எக்ஸ்பீரியா 1 IV

சோனி எக்ஸ்பீரியா 10 IV மற்றும் சோனி எக்ஸ்பீரியா 1 IV

சோனி எக்ஸ்பீரியா 10 IV மற்றும் சோனி எக்ஸ்பீரியா 1 IV ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி எக்ஸ்பீரியா 10 IV ஸ்மார்ட்போனானது உலகின் மிக இலகுவான 5ஜி சாதனமாக வருகிறது. சோனி எக்ஸ்பீரியா 1 IV ஸ்மார்ட்போனானது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் போட்டியிடும் வகையில் அனைத்து உயர்தர சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா 10 IV விலை விவரங்கள்

சோனி எக்ஸ்பீரியா 10 IV விலை விவரங்கள்

சோனி எக்ஸ்பீரியா 10 IV ஸ்மார்ட்போனானது பிளாக், வைட், மின்ட் மற்றும் லாவெண்டர் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். சோனி எக்ஸ்பீரியா 10 IV ஸ்மார்ட்போனானது இந்திய விலை மதிப்புப்படி ரூ.40,700-க்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் சோனி எக்ஸ்பீரியா 1 IV ஸ்மார்ட்போனானது $1599 இந்திய விலை மதிப்புப்படி ரூ.1,23,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ஐஸ் ஒயிட் மற்றும் வயலெட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா 10 IV சிறப்பம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா 10 IV சிறப்பம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா 10 IV சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே திரை ஆதரவோடு 6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 21:9 விகிதத்தைக் கொண்டுள்ளது. இது பிரகாசமான டிரிலுமினஸ் பேனலைக் கொண்டிருக்கிறது. இது அதன் வழக்கமான ஸ்மார்ட்போனைவிட 50 சதவீதம் அதிக பிரகாசத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு ஆதரவுக்கு என கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு இருக்கிறது.

ஸ்மார்ட்போன் கேமரா அம்சங்கள்

ஸ்மார்ட்போன் கேமரா அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி இந்த சாதனத்தை 1டிபி வரை உள்சேமிப்பகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். அதேபோல் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் 2எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இந்த சாதனத்தின் முன்புறத்தில் 8 எம்பி ஷூட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. சோனி எக்ஸ்பீரியா 10 IV ஸ்மார்ட்போனானது 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த சாதனத்தில் சார்ஜர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இந்த சாதனம் 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1 உள்ளிட்டவை அடங்கும். இந்த சாதனத்தில் ஐபி68 மதிப்பீடு இருக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா 1 IV சிறப்பம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா 1 IV சிறப்பம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா 1 IV சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்துடன் கூடிய 6.5 இன்ச் 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. டிசிஐ-பி3 100% வண்ண வரம்பு மற்றும் 10-பிட் டோனல் கிரேசேஷன் ஆதரவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

மூன்று 12 எம்பி சென்சார்கள்

மூன்று 12 எம்பி சென்சார்கள்

சோனி எக்ஸ்பீரியா 1 IV ஆனது மூன்று 12 எம்பி சென்சார்கள் உடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகையில் துல்லியமான காட்சி பதிவு ஆதரவை இது வழங்குகிறது. சோனி எக்ஸ்பீரியா 1 IV ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 30 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு, கைரேகை ஸ்கேனர். ஐபி 68 மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
sony xperia 10 IV and sony xperia 1 IV Launched With 4K OLED Display, Triple 12MP Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X