பேரு சோனி., நியாபகம் இருக்கா?- அமோக அம்சத்துடன் சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் அறிமுகம்!

|

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் சாதனம் ஆனது ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் ஜப்பானிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தாண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் மாடலின் டோன் டவுன் ஆஃப்ஷூட் ஆகும்.

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட்

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட்

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமரா வடிவமைப்போடு வருகிறது. 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சாஃப்ட்வேர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. இது 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் விலை விவரங்கள்

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் விலை விவரங்கள்

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு அம்சமானது இந்திய மதிப்புப்படி ரூ.31,600 என்ற விலையில் இருக்கிறது. இது வைட், ப்ளூ, பிளாக் மற்றும் இளஞ்சிவப்பு வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜப்பானில் ரகுடென் மொபைல் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என கூறப்படுகிறது.

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் சிறப்பம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் சிறப்பம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் சாதனமானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இரட்டை சிம்கார்ட் ஸ்லாட்களோடு ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,520 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு

பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உடன் வருகிறது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. பாதுகாப்பு வசதிக்கு ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை சுமார் 169 கிராம் ஆக இருக்கிறது. இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில் வைஃபை 802, ப்ளூடூத் வி5.1, யூஎஸ்பி டைப் சி போர்ட், 5ஜி ஆகியவைகளோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Sony Xperia 10 III Lite Launched with 4500 mAh Battery, 6GB RAM and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X