Home
News

ஓ மை காட்.. SONY Xperia பிளாக்ஷிப் போன் வருதா? கேமராவை பார்த்து வாய்பிளந்த ரசிகர்கள்.. என்ன மாடல்?

சோனி (Sony) ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. சோனிக்கு சொந்தமான ஸ்மார்ட்போன் பிராண்ட்டான எக்ஸ்பீரியா (Xperia) மூலம் வெளிவரும் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்த விபரங்கள் லீக் ஆகியுள்ளது. இது Sony Xperia 1 VI என்று பெயரில் வெளிவரும்.

இதை சோனி எக்ஸ்பீரியா 1 மார்க் சிக்ஸ் என்று அழைக்கிறார்கள். காரணம், இறுதியில் உள்ள VI ரோமன் லெட்டர் தகவல் படி, 6 என்ற எண்ணை குறிக்கிறது. இந்த புதிய Sony Xperia 1 VI ஸ்மார்ட்போன் சாதனம் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஓ மை காட்.. SONY Xperia பிளாக்ஷிப் போன் வருதா? என்ன மாடல்?

சோனி நிறுவனம் கடந்த ஆண்டு Sony Xperia 1 V என்ற மார்க் ஃபைவ் மாடல் போனை ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோனி எக்பீரியா 1 V (Sony Xperia 1 V) ஸ்மார்ட்போன் சாதனத்தில் நிறுவனம் 48MP பிரைமரி கேமராவை வழங்கியிருந்தது. இதில் 1 கேமரா சென்சார் மட்டுமே Exmor T for mobile என்ற அம்சத்தை கொண்டிருந்தது.

ஆனால், தற்போது வெளியாகவிருக்கும் புதிய Sony Xperia 1 VI ஸ்மார்ட்போன் சாதனத்தில் மூன்று கேமரா சென்சர்களும் 48MP உடன் இந்த Exmor T for mobile அம்சத்தை கொண்டிருக்கும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு Sony Xperia 1 VI பற்றிய லீக் விபரங்கள் ஆங்காங்கே எழுந்து மறைந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் Sony Xperia 1 VI பெயர் அடிப்படை துவங்கியுள்ளது.

சமீபத்தில் இன்ஸைடர் சோனி (Insider SONY) என்ற லீக் வலைப்பக்கம் வழியாக வெளியான பதிவில், இந்த புதிய Sony Xperia 1 VI ஸ்மார்ட்போன் சாதனம் மூன்று 48MP சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டிருக்கும் என்ற புகைப்பட விபரத்தை தெளிவாக காண்பித்துள்ளது. இதன் முந்தைய மாடலை விட கூடுதல் மேம்படுத்தல்களை இது கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஓ மை காட்.. SONY Xperia பிளாக்ஷிப் போன் வருதா? என்ன மாடல்?

இந்த புதிய Sony Xperia 1 VI ஸ்மார்ட்போன் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள Exmor T தொழில்நுட்பம் இரைச்சல் இல்லாத புகைப்படங்களை படம்பிடிக்க உதவுகிறது. இதன் மூலம் சோனிக்கே உரிய தரமான மற்றும் துல்லியமான புகைப்படங்களை ஸ்மார்ட்போன் பயனர்கள் பெற முடியும் என்று சோனி தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 1080P வீடியோ ரெக்கார்டிங்கை EIS ஆதரவுடன் வழங்குகிறது.

ஆம், இந்த புதிய சோனி எக்ஸ்பீரியா 1 VI ஸ்மார்ட்போன் சாதனம் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டாப்பிலைசேஷன் (electronic image stabilization) EIS ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வழங்கப்பட்டுள்ள 48MP டெலிபோட்டோ சென்சார் 6X ஜூம் ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் பற்றிய விபரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

பெரும்பாலும் இந்த புதிய சோனி எக்ஸ்பீரியா 1 VI (Sony Xperia 1 VI) ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 26 அல்லது 28 ஆம் தேதி 2024 இல் அறிமுகம் செய்யப்படும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இதன் அறிமுகம் குறித்த விபரங்களை விரைவில் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia 1 VI Flagship Smartphone Spotted With 48MP Exmor T For Mobile Triple Camera Sensor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X