Samsung, OnePlus-க்கு அல்லு இல்ல.. 7-இன்ச் டிஸ்பிளே போனுடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நிறுவனம்! என்ன மாடல்?
மிகவும் பிரபலமான மற்றும் பழமையான ஜப்பானிய நிறுவனம் (Japanese Company) ஒன்று, தனது புதிய 7-இன்ச் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் ஒன்றின் வழியாக சிறப்பான ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருவது போல் தெரிகிறது. அதென்ன நிறுவனம்? அது அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போன் என்ன? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது சோனி (SONY) நிறுவனத்தையும், அது அறிமுகம் செய்யவுள்ள எக்ஸ்பீரியா ஃபிளிப் (Xperia Flip) என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனையும் பற்றித்தான். எக்ஸ்பீரியா ஃபிளிப் என்கிற பெயர் குறிப்பிடுவது போலவே இதுவொரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக (Foldable Smartphone) இருக்கும்.

அதாவது சோனி எக்ஸ்பீரியா ஃபிளிப் மாடலானது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி, கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5), சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) போன்ற மாடல்களுக்கும் கடும்போட்டியாக களமிறங்க உள்ளது.
ஜப்பானிய ஊடகமான சுமஹோடிஜெஸ்ட்டின் (Sumahodigest) அறிக்கையை தொடர்ந்து, பிரபல டிப்ஸ்டர் ஒருவரால் சோனி எக்ஸ்பீரியா ஃபிளிப் போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் ட்விட்டர் வழியாக பகிரப்பட்டுள்ளது. அதன் மூலம் சோனி எக்ஸ்பீரியா ஃபிளிப் ஆனது ஜூலை 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5-ஐ போலவே வெர்டிக்கல் ஃபோல்டிங் டிசைனை (Vertical folding design) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி எக்ஸ்பீரியா ஃபிளிப்பின் இன்னர் டிஸ்பிளேவின் (Inner Display) அளவானது 7-இன்ச் ஆக இருக்கலாம் என்றும், அது 21:9 என்கிற ரேஷியோவின் (21:9 Ratio) கீழ் 4கே டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவீடுகள் உண்மையாகும் பட்சத்தில், இது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 4 (Samsung Galaxy Z Flip 4) மாடலை விட சற்று அகலமானதாக இருக்கும்.
சோனி எக்ஸ்பீரியா ஃபிளிப்பின் வருகையானது, போல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தையில் சோனியின் நுழைவை குறிப்பதோடு நில்லாமல், இந்த ஸ்மார்ட்போன் (2018 இல் இருந்து புதிய அறிமுகத்தை காணாத) சோனியின் காம்பாக்ட் சீரீஸின் (Sony Compact Series) மறுபிரவேசத்தையும் குறிக்கிறது. எல்லாம் சரியாக நடந்தால், சோனி எக்ஸ்பீரியா ஃபிளிப் ஆனது ஒரு கேம்-சேஞ்சராக இருக்கலாம்!
இதுதவிர்த்து சோனி நிறுவனமானது அதன் எக்ஸ்பீரியா ஃபிளிப் போனில் தனது கேமிங் நிபுணத்துவத்தை (Gaming Expertise) பிரதிபலிக்கும் அம்சங்களையும் சேர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் என்கிற ஒரேவொரு விற்பனை புள்ளியை (Selling Point) வைத்து ரீ-என்ட்ரி கொடுக்க முடியாது என்பதை சோனி நன்கு அறிந்திருப்பது போல் தெரிகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சோனியின் இந்த ஃபிளிப் போன் சரியான எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற வெளியீட்டு தேதி (Launch Date) எதுவும் தெரியவில்லை. நினைவூட்டும் வண்ணம் சோனி மற்றும் ஆப்பிள் (Apple) மட்டுமே ஃபோல்டபிள் ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போனை இன்னமும் வெளியிடாத / அறிவிக்காத சில முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களாக இருந்து வருகின்றன!


Click it and Unblock the Notifications








