Home
News

க்யூட்டா... குட்டியா...சோனி ஸ்மார்டவாட்ச்!

By Super
க்யூட்டா... குட்டியா...சோனி ஸ்மார்டவாட்ச்!

ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் அதிகமாவது போல் இப்போது ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. சோனி நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்த மாதத்தின் இறுதியில் அறிமுகமாகும்.

இதன் தொழில் நுட்பத்தினை கேட்டால், இதற்கு ஸ்மார்ட்வாட்ச் என்ற பெயர் சரி என்று தான் தோன்றும். இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போனுடன் எளிதாக இணைக்க முடியும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் இ-மெயில், கேலன்டர், எஸ்எம்எஸ், நெட்வொர்கிங் அப்டேஷன் போன்ற வசதிகளை பயன்படுத்த உதவும். இன்றும் அதிகமாக எஸ்எம்எஸ் செய்யப்படுகிறது. இளைஞர்கள் அதிகமாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வசதியினையும் இந்த சோனி ஸ்மார்ட்வாட்ச் வழங்கும். அதிக நேரம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறி கொள்பவர்கள், இதற்காக அகன்ற திரை கொண்ட ஸ்மார்ட்போனை கையில் வைத்து கொண்டு அழுத்தி கொண்டே இருக்க வேண்டியதில்லை.இந்த ஸ்மார்ட்வாட்ச்சை கையில் கட்டி கொண்டே ஃபேஸ்புக், ட்விட்டர் வலைத்தளத்தினை ஆராயலாம். புதிதாக அறிமுகமாக இருக்கும் இந்த சோனி ஸ்மார்ட்வாட்ச் ரூ.6,299 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X