டிசெம்பரில் வெளியாகிறது சோனி ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேன்ட் டால்க்
சோனி நிறுவனம் தனது ஆன்டிராய்டு வியர் பவர்டு ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேன்ட் டால்க் கருவிகளை இந்தாண்டு டிசெம்பர் மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் விலை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1
சோனி ஸ்மார்ட் வாட்ச் 3 1.6 இன்ச் 320*320சதுர டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 512 எம்பி ராம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் வசதியோடு என்எப்சி, ப்ளூடூத் 4.0, 420 எம்ஏஎஹ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதோடு வாட்டர் ரெசிஸ்ட்டன்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

2
மற்ற ஸ்மார்ட் வாட்ச்களை போன்றே இதிலும் கூகுள் நௌ இன்டிகிரேஷன் மற்றும் ஆன்டிராய்டு 4.3 மற்றும் அதற்கு உயரிய வகை ஸ்மார்ட் போனுடன் இணைக்கவும் முடியும்.

3
சோனி ஸ்மார்ட் வாட்ச் கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு மாற்றக்கூடிய ஸ்டிராப்கள் இருப்பதால் மற்ற நிறுவனங்களின் பல வண்ண ஸ்டிராப்களை மாற்றிக்கொள்ள முடியும்.

4
ஸ்மார்ட் பேன்ட் டால்க் மூலம் அதனுடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்க முடியும்.

5
ஸ்மார்ட் பேன்ட் மூலம் போன் நோட்டிபிக்கேஷன், குருந்தகவல்களை பார்க்க முடியும்

6
ஸ்மார்ட் பேன்ட் சிறப்பம்சங்களை பொருத்த வரை 1.4 இன்ச் ஈ-இன்க் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்ட்டன்ஸ், 70 எம்ஏஎஹ் பேட்டரி, ப்ளூடூத் 4.0 மற்றும் மைக்ரோபோனும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட் பேன்டும் கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும்

7
நீங்க உங்க வாய்ஸ் மூலம் ஸ்ர்ச் செய்யலாம்

8
வானிலை அறிக்கையை பெற முடியும்

9
கேலன்டர் மூலம் ரிமைன்டர்களை பார்க்க முடியும்

10
புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆன்டிராய்டு மூலம் இயங்குவதால் இதில் நீங்கள் பல ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications