அல்டிமேட் அம்சங்களுடன் PS5 Pro.. பிளேஸ்டேஷன் 5 வரிசையில் ஒரு மாஸ்டர் பீஸ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சோனி (SONY) நிறுவனத்தின் அடுத்த புதிய பிளேஸ்டேஷன் மாடல் விரைவில் வெளிவரப்போகிறது. இது பிளேஸ்டேஷன் 5 ப்ரோ (SONY Playstation 5 Pro) என்ற பெயருடன் வெளிவரவுள்ளது. இதில் என்னென்ன புதுமைகளை சோனி களமிறங்கியுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.
SONY Playstation 5 Pro: கடந்த சில மாதங்களாக இந்த புதிய பிளேஸ்டேஷன் 5 ப்ரோ கருவியை பற்றி பல லீக் தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி கொண்டிருந்தது. இப்போது முதல் முறையாக, பிளேஸ்டேஷன் 5 மற்றும் பிளேஸ்டேஷன் 5 ப்ரோ (PS5 Pro) இடையிலான வேறுபாடுகள் என்ன? புதிய பிளேஸ்டேஷன் 5 ப்ரோ சாதனத்தின் சக்தி எத்தகையது என்பதை பற்றி அறிவிக்கும் லீக் தகவல் இப்போது லீக் ஆகியுள்ளது.

பிளேஸ்டேஷன் 5 ப்ரோ: புதிய லீக் தகவல்கள் நம்பமுடியாத சக்தியுடன் பிளேஸ்டேஷன் 5 ப்ரோ சாதனத்தை மார்க் செய்துள்ளது நம்மை வியக்க வைக்கிறது. சோனியின் புதிய பிளேஸ்டேஷன் 5 ப்ரோ சாதனத்தின் சிபியு (CPU) திறன் பிளேஸ்டேஷன் 5 கருவில் இருந்ததை போலவே ஒற்றுமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பிளேஸ்டேஷன் 5 ப்ரோ ஒரு பிரத்தியேக மோடை பெரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பை விட அதிக வேகம்: ஆம், பிளேஸ்டேஷன் 5 ப்ரோ சாதனத்தில் 'ஹை சிபியு ஃபிரிக்வென்ஸி மோட்' (High CPU Frequency Mode) என்ற பிரத்தியேக அம்சம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்தியேக அம்சம் பிளேஸ்டேஷனின் கிளாக் ஸ்பீடை 3.85GHz அதிகரிக்கிறது. அதாவது, பிளேஸ்டேஷன் 5 சாதனத்தின் சிபியு திறனை விட 10% அதிக வேகத்தை இந்த மோட் அடைய அனுமதிக்கிறது.
பிளேஸ்டேஷன் 5 ப்ரோவில் 576GB/s வேகம்: ஆனால், இதில் ஒரு சிறிய குறைபாடு உள்ளது. இது GPU பெர்பார்மென்ஸை 1.5% குறைக்கிறது என்று லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல போனால், பிளேஸ்டேஷன் 5 சாதனத்தை விட இந்த புதிய பிளேஸ்டேஷன் 5 ப்ரோ சாதனம் 28% பேண்ட்வித் மேம்படுதலை குறிப்பிடுகிறது. இது 576GB/s வேகத்தை பெறுகிறது.
பிளேஸ்டேஷன் 5 வேகம் என்ன தெரியுமா? இது பிளேஸ்டேஷன் 5 சாதனத்தில் கிடைக்கும் 448GB/s வேகத்தை விட பல மடங்கு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் பிளேஸ்டேஷன் 5 ப்ரோ சாதனத்தில் இடமெபெறும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இதன் மூலம் டேட்டா டிரான்ஸ்பர் வேகமாகிறது. இதனால் கிராஃபிக்ஸ் மற்றும் கேமின் பெர்பார்மெஸ்ன் கூட அதிகளவில் மேம்படுகிறது.

4X வேகமான டிரேசிங்: பிளேஸ்டேஷன் 5 ப்ரோ பற்றி பேசுகையில், இந்த புதிய கேமிங் கன்சோல் டிவைஸ் சிறிய மேம்படுத்தல்களை பெற்றிருந்தாலும், இது பெரியளவு பெர்பார்மென்ஸ் மாற்றத்தை கொண்டுவருகிறது. பிளேஸ்டேஷன் 5 ப்ரோ சாதனத்தின் ரெண்டரின் பவர் 45% மேம்படுதலை பெறுகிறது. இது 4X வேகமான டிரேசிங் பெர்பார்மென்ஸ் மற்றும் 33.5 டெராபிலாப்ஸ் மேம்படுதலை பெறுகிறது.
8K வியூ கேமிங் அனுபவம்: இவை அனைத்தும் ரே-ட்ரேஸிங் முடுக்கத்திற்கான சிறப்பு வன்பொருளுடன் வெளிவருகிறது. இந்த புதிய மேம்படுத்தல் மூலம் பிளேஸ்டேஷன் 5 ப்ரோ சாதனம் மென்மையான 4K கேமிங் அனுபவங்கள் வழங்குகிறது. இத்தோடு, எதிர்காலத்தில் நிரூபிக்கப்பட்ட 8K வியூ கேமிங் அனுபவத்தை வழங்க கூடிய அம்சத்துடன் வரும் சிறந்த கன்சோளாக வெளிவரவிருக்கிறது.
PS5 Pro எப்போது அறிமுகம்? இதனுடன், பிஎஸ்5 ப்ரோ சிறந்த ஆடியோ தொழில்நுட்பத்தைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆடியோ கம்ப்யூட் வாய்ஸ் (ஏசிவி) அதிக கிளாக் வேகத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக ஆடியோ கம்ப்யூட் மாட்யூல் (ஏசிஎம்) லைப்ரரிக்கு 35% செயல்திறன் ஆதாயம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த லீக் தகவல்களை வைத்து பார்க்கையில், கன்சோலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








