அத்திரி புத்திரி ஆஃபர்.. ரூ.13000 முழுசா தள்ளுபடி.. SONY PlayStation 5 வாங்க சரியான நேரம்..
சோனி (Sony) நிறுவனத்தின் புதிய சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் (SONY PlayStation 5 Slim) மாடல் கேமிங் கன்சோல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சோனி பிளேஸ்டேஷன் 5 சாதனத்தின் விலை இப்போது அதிரடியாக குறைந்துள்ளது.
சோனி இந்தியா (SONY India) இப்போது அதன் சோனி பிளேஸ்டேஷன் 5 மாடலின் மீது முதல் முறையாக ரூ.13,000 வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது பிளேஸ்டேஷன் வாங்க நினைத்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. சோனி நிறுவனம் இப்போது அதன் மிகவும் லேட்டஸ்ட் ஆன சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் (SONY PlayStation 5 Slim) கேமிங் கன்சோல் மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

சோனி பிளேஸ்டேஷன் 5 ஆஃபர் (SONY PlayStation 5 Offer):
இதற்கு, மத்தியில் நிறுவனம் சம்மர் ப்ரோமோ (Summer Pro) என்ற சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்துள்ளது. இதுவொரு குறுகிய கால சிறப்பு தள்ளுபடி விற்பனை என்றும் சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனை வரும் ஏப்ரல் 10, 2024 ஆம் தேதி முதல் துவங்கி, ஏப்ரல் 30, 2024 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்திற்குள் மட்டும் சோனி பிளேஸ்டேஷன் 5 (SONY PlayStation 5 ) மாடல் மீது அதன் அசல் விலையில் இருந்து ரூ. 13,000 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது SONY PlayStation 5 சாதனத்தின் டிஸ்க் எடிஷன் மாடலுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சோனி பிளேஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் சந்தானத்திற்கு இந்த சலுகை பொருந்தாது என்று நிறுவனம் கூறியுள்ளது.
ஆம், சோனி பிளேஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் (SONY PlayStation 5 Digital Edition) வழக்கம் போல, அதே விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி பிஎஸ் 5 டிஸ்க் எடிஷன் (SONY PS 5 Disk Edition) மாடல் மீதும் மட்டும் ரூ.13,000 தள்ளுபடி வழங்கப்படுமென்று கூறப்பட்டுள்ளது. அதுவும் இந்த தள்ளுபடி குறிப்பிட்ட காலம் வரை, ஸ்டாக் தீரும் வரை மட்டுமே கிடைக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

சோனி பிளேஸ்டேஷன் 5 சலுகை விலை என்ன?
டிஜிட்டல் வெர்ஷன் சோனி பிளேஸ்டேஷன் 5 சாதனத்தின் தற்போதைய அசல் விலை ரூ. 54,990 ஆகும். சலுகைக்கு பிறகு, இதை இப்போது வெறும் ரூ. 41, 999 என்ற விலையில் வாங்க முடியும். புதிதாக SONY PlayStation 5 வாங்க ஆசைப்படுவோருக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும். சோனி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ஸ்லிம் கன்சோல் (SONY PlayStation 5 Slim Gaming Console) விலை என்ன தெரியுமா?
இந்தியாவில் SONY PlayStation 5 Slim கன்சோல் விலை ரூ.44,990 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் வழக்கம் போல 2 விதமான எடிஷன்களில் வெளிவருகிறது. இது டிஸ்க்லெஸ் (disc-less) மாடலான சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் டிஜிட்டல் எடிஷன் (Digital edition) மாடலாக வெளிவருகிறது. மற்றும் டிஸ்க் (Disc version) உள்ளீட்டை அனுமதிக்கும் டிஸ்க் எடிஷன் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








