Home
News

சோனி பிளேஸ்டேஷன் 5 மீது அதிரடி விலை குறைப்பு.. கொத்தா தள்ளுபடி.. குறுகிய கால சலுகை..

கேமர்களே கொஞ்சம் கவனியுங்க.. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் வாங்க ஆசைப்படும் ஒரு சாதனமாக சோனி நிறுவனத்தின் சோனி பிளேஸ்டேஷன் 5 ( Sony PS5) திகழ்கிறது. இந்த சாதனத்தை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது.

இப்போது இதை சலுகை விலையுடன், முன்பை விட மிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. ஆம், இப்போது இந்த பிளே ஸ்டேஷன் சாதனத்தின் மீது ரவுண்டாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் அட்டகாசமான சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சோனி பிளே ஸ்டேஷன் மீது ரூ. 7500 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சோனி பிளேஸ்டேஷன் 5 மீது அதிரடி விலை குறைப்பு.. கொத்தா தள்ளுபடி..

சோனி ஒரு பெரிய விளம்பர ஒப்பந்தத்திற்கு தயாராகி வருகிறது. இது பிளேஸ்டேஷன் 5 சாதனத்தை இந்திய கேமர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான வாங்குதலாக மாற்ற முடிவு செய்துள்ளது. சோனி நிறுவனம் தனது சமீபத்திய தலைமுறை கேமிங் கன்சோல்களுக்கான விலைக் குறைப்பை திடீரென அறிவித்து, சோனி பிளே ஸ்டேஷன் ரசிகர்களை மிரளவைத்துள்ளது.

சோனி பிஎஸ் 5 (Sony PS5) இப்போது ரூ. 44,990 முதல் தொடங்குகிறது. இந்த அற்புதமான ஒப்பந்தத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. சோனி PS5 டிஸ்க் எடிஷன் வெறும் ரூ. 47,490 விலைக்கு பட்டியலிடப்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் விற்பனை துவங்கி அடுத்த 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த சிறப்பு விளம்பர ஒப்பந்தம் செப்டம்பர் 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய விலைக் குறைப்பு பல சேனல்களில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை பின்வரும் ஸ்டோர்களில் மற்றும் போர்டல்களில் பிரதிபலிக்கும் என்று சோனி அறிவித்துள்ளது.

டாடா குரோமா (Tata Croma), விஜய் சேல்ஸ் (Vijay Sales), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) மற்றும் ஷாப்அட்எஸ்சி (ShopatSC) போன்ற சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்க கிடைக்கும். அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற இ-காமர்ஸ் தளங்கள் வழியாகவும் இந்த சலுகை கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த விளம்பர சலுகை கடந்த மாதம் நேரலையில் வந்த PS5 தள்ளுபடியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. சோனி பிராண்ட் அதன் பிளேஸ்டேஷன் கன்சோலுக்கு அடிக்கடி தள்ளுபடியைக் கொண்டுவருகிறது என்பது கவனிக்கத்தக்கது. அடிக்கடி சலுகைகளை வழங்கி, சோனி அதன் ரசிகர்களை குஷியடைய செய்து, அதிக யூனிட்களை விற்பனை செய்து வருகிறது.

எனவே இந்த புதிய ஒப்பந்தம் மிகவும் ஆச்சரியமாக இல்லை, இருப்பினும் குறுகிய காலத்திற்கு கிடைக்கும் சலுகையை சரியாக பயன்படுத்திக்கொண்டால், உங்களுக்கு 7500 ரூபாய் இப்போது சேமிப்பாகும் என்பதை நினைவில்கொள்ளவும். சமீபத்திய அறிக்கையின் படி, விற்பனையில் இந்த தள்ளுபடிகளின் தாக்கங்களை நிறுவனம் உணர்ந்துள்ளது. சோனி அதன் விற்பனை இலக்குகளை சந்திக்க இது போன்ற ஒப்பந்தங்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது .

சோனி ப்ளேஸ்டேஷன் 5 இப்போது இரண்டு வேரியண்ட் மாடல்களில் கிடைக்கிறது. இதில் டிஸ்க் எடிஷன் மற்றும் டிஜிட்டல் எடிஷன் ஆகியவை அடங்கும். முந்தையதில் டிஸ்க் டிரைவ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இது மிகவும் மலிவு விலையில் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய தள்ளுபடியுடன், சோனி பிளே ஸ்டேஷன் 5 மாடல் இந்தியாவில் நம்ப முடியாத விலையாக வெறும் ரூ. 44,990 என்ற விலையில் விற்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Playstation 5 Gets Massive Offer Of Rs 7500 For Next 10 Days From August 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X