SONY கேமிங் ட்ரீட்.. INDIAN கிரிக்கெட் எடிஷன்.. டி20 டீம்கள்.. 50 ஸ்டேடியங்கள்.. பிஎஸ்5 தாறுமாறு!
இந்தியாவின் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை தட்டித்தூக்கும் விதமாக நாட்டிலுள்ள டி20 டீம்கள் மற்றும் 50 ஸ்டேடியங்களை அப்படியே உரித்து வைத்தது போன்ற விர்ச்சுவல் அனுபவத்துடன் சோனி பிஎஸ்5 கன்சோல் கிரிக்கெட் 24 (Sony PlayStation 5 Console Cricket 24) கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்களையும் கிரிக்கெட்டையும் பிரித்து பார்க்கவே முடியாது. ஒரு காலத்தில் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்பட்ட கிரிக்கெட் இப்போது, கோடிக்கணக்கான மக்களின் உணர்வு சார்ந்த விளையாட்டாக மாறிவிட்டது. பள்ளி, கல்லூரி மட்டுமல்லாமல் அலுவலகத்துக்கு கூட லீவு போட்டுவிட்டு, கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களை இங்கு பார்க்க முடியும்.

இப்படி மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கிரிக்கெட் விளையாட்டை சோனி பிளே ஸ்டேஷன் இந்தியா (Sony PlayStation India) நிறுவனம், அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளது. இந்தியன் எடிஷன் கிரிக்கெட் 24 (Indian Edition Cricket 24) கேம் கொண்ட பிளே ஸ்டேஷன் 5 கன்சோலை (PlayStation 5 Console) அறிமுகம் செய்துள்ளது.
இந்த இந்தியன் எடிஷன் கிரிக்கெட் 24 கேம் ஆனது, கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போடும் விதமாக, இந்தியாவின் அதிகாரப்பூர்வ டி20 டீம்களையும், அதன் பிளேயர்களையும், அவர்களது ஆட்டத்தின் பாணியையும், நாட்டில் உள்ள 50 மைதானங்களையும் உரித்து வைத்து போன்ற விர்ச்சுவல் அனுபவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிளே ஸ்டேஷன் கேமிங் பிளேர்களை மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களையும் புதுவித அனுபவத்துக்கு எடுத்து செல்லும்.
இந்த பிளே ஸ்டேஷனில் கன்சோலுடன் எச்டிஎம்ஐ கேபிள் (HDMI Cable), ஏசி பவர் கோர்டு (AC Power Cord) மற்றும் யுஎஸ்பி கேபிள் (USB Cable) கொடுக்கப்படும். அதோடு கேமிங் தொடர்பான யூசர் மேனுவல்ஸ் (User Manuals) வழங்கப்படும். குறிப்பாக, டூயல்சென்ஸ் வயர்லெஸ் கன்ட்ரோலர் (DualSense Wireless Controller) கொடுக்கப்படும்.
இந்த சோனி பிளே ஸ்டேஷன் 5 கன்சோல் இன்று (அக்டோபர் 4) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த பிளே ஸ்டேஷனின் விலை ரூ.57,990ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் அறிமுக சலுகையாக வெறும் ரூ.47,990க்கு விற்பனைக்கு வருகிறது.
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் சோனி சென்டர்கள் (Sony Center) மூலம் இதை வாங்கிக் கொள்ளலாம். அதேபோல குரோமா (Croma), ரிலையன்ஸ் (Reliance) மற்றும் விஜய் சேல்ஸ் (Vijay Sales) ஆகியவற்றிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. கிரிக்கெட் கேமிங் பிரியர்களுக்கு இது புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் சோனி பிளே ஸ்டேஷன் 5 கன்சோலின் அம்சங்களை தெரிந்து கொள்வது நல்லது. இந்த பிளே ஸ்டேஷன் 5 ஏஎம்டி ரைஷன் ஜென் 2 (AMD Ryzen Zen 2) சிப்செட் மற்றும் ஏஎம்டி ரேடியான் ஆர்டிஎன்ஏ 2 (AMD Radeon RDNA 2) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.
இதில் 16 ஜிபி ரேம் + 825 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. அதோடு எஸ்எஸ்டி கார்ட் சிலாட் இருக்கிறது. டெம்பெஸ்ட் 3டி ஆடியோடெக் (Tempest 3D AudioTech) அவுட்புட் கொண்டுள்ளது. வீடியோ அவுட்புட் சப்போர்ட்டுக்காக 4கே யுஎச்டி ப்ளூ-ரே டிரைவ் (4K UHD Blu-Ray Drive) வருகிறது.
அதோடு 120Hz டிவி ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. எச்டிஎம்ஐ வெர்ஷனில் 8K ரெசொலூஷன் கிடைக்கும். 4 யுஎஸ்பி (USB) போர்ட் மற்றும் 1 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட் வருகிறது. வை-பை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எடை 4.5 கிலோ இருக்கிறது.


Click it and Unblock the Notifications








