PlayStation 5 வாங்குவது உங்கள் கனவா.? நேரம் வந்திடுச்சி.. அமேசானில் பம்பர் ஆஃபர்!
அமேசான் கிரேட் சம்மர் சேலில் (Amazon Great Summer Sale) சோனி பிளேஸ்டேஷன் 5 (Sony Play station 5) மீது அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக பிளேஸ்டேஷன் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டுவருவோர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். இப்போது, குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதுகுறித்த விவரங்கள் இதோ.
எப்போதும் 90'ஸ் கிட்ஸ்களுக்கு கேமிங்கில் அதிக ஆர்வம் இருக்கும். சூப்பர் மரியோ (Super Mario), கான்ட்ரா (Contra) முதல் ஜிடிஏ (GTA), காட் ஆஃப் வார் (God of War), என்எஃப்எஸ் மோஸ்ட் வான்டட் (NFS Most Wanted) வரை அனைத்து கேம்களிலும் கொடிகட்டி பறந்திருக்க வாய்ப்புள்ளது. இவர்களில் பலரும் வேலைக்கு சென்ற உடன் எப்படியாவது ஒரு பிளேஸ்டேஷன் (PlayStation 5) வாங்கிவிட வேண்டும் என்று திட்டம் போட்டிருப்பார்கள்.

இந்த பிளேஸ்டேஷன் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் விலை கொண்டதால், பல காரணங்களால் "அப்புறம் வாங்கிக்கலாம்" என்று வாங்காமலேயே விட்டுவிடுவார்கள். இருப்பினும், அவர்களது மனதில் பிளேஸ்டேஷன் மீதான ஆசை குறையவே குறையாது என்றே சொல்லலாம். சொல்லப்போனால், அவர்களின் குழந்தைகளுக்கே பிளேஸ்டேஷன் விளையாடும் வயது வந்திருந்தாலும் கூட, ஜிடிஏ 4 மற்றும் 5 உள்பட பல கேம்களை விளையாடமலேயே விட்டுவிடுவோமோ என்ற ஏக்கம் அவர்களுக்கு இருப்பது உண்மைதான்.
இதனாலேயே, பிளேஸ்டேஷனுக்கு இந்தியாவில் இன்னும் மவுசு குறையவில்லை. 90'ஸ் கிட்ஸ்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர். இதில் பலர் வாங்கமால் இருந்தால், அவர்களுக்கு சரியான நேரம் வந்துவிட்டது. அமேசான் கிரேட் சம்மர் சேலில் மலிவான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
அமேசானின் கிரேட் சம்மர் சேல் விற்பனையானது, இன்று (மே 4) தொடங்கிவிட்டது. இந்த விற்பனை மே 8ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும். இந்த நாள்களில் ஸ்மார்ட்போன் முதல் வீட்டு உபயோகப்பொருள்கள் வரை அனைத்திலும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், சோனி பிளேஸ்டேஷன் 5 (Sony Play station 5) மீது அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனி பிளேஸ்டேஷன் 5: சோனி பிளேஸ்டேஷன் 5 ஆனது டிஜிட்டல் வெர்ஷன் (Digital Version) மற்றும் டிஸ்க் வெர்ஷன் (Disc Version) என இரண்டு வகைகளில் வருகிறது. அதாவது, டிஜிட்டல் வெர்ஷனில் அதில் கொடுக்கப்படும் கேம்களை மட்டுமே விளையாட முடியும். தேவைப்பட்டால், பணம் கட்டி புதிய கேம்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஆனால், டிஸ்க் வெர்ஷனில் டிஸ்க் டிரைவ்வை பயன்படுத்தி பென்டிரைவ்வில் கேம்களை மாற்றிக்கொள்வது போல யாரிடம் இருந்தும் வாங்கிக்கொண்டு கேம்களை விளையாட முடியும். இதனாலேயே டிஸ்க் வெர்ஷனின் விலை அதிகமாக உள்ளது. அந்த வகையில், டிஜிட்டல் பிஎஸ் 5 விலை ரூ. 44,990 ஆகவும், டெஸ்க் வெர்ஷன் விலை ரூ.49,900 ஆகவும் உள்ளது.
இப்போது அமேசானில் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி மூலம் ரூ.49,900 மதிப்புள்ள பிஎஸ் 5 டிஸ்க் வெர்ஷனை ரூ. 48,490-க்கு வாங்கிக்கொள்ள முடியும். இந்த ஆஃபரை ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்லால், ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டுக்கு ரூ. 500 தள்ளுபடியும், கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 1500 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ் 5 டிஸ்க் வெர்ஷனை இஎம்ஐ மூலமும் வாங்கிக்கொள்ளலாம். இதற்கு மாதம் ரூ.4,075 செலுத்தினால் போதும்.


Click it and Unblock the Notifications








