இந்தியாவில் சோனி நிறுவனம் வெளியிடும் புதிய பிரேவியா OLED A1 தொலைக்காட்சி

சோனி நிறுவனம் இந்தியாவில் தற்போது புதிய ரேவியா OLED A1 என்ற தொலைக்காட்சியை ரூ.3,64,900 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது

By Siva
|

சோனி நிறுவனம் இந்தியாவில் தற்போது புதிய ரேவியா OLED A1 என்ற தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது. ரூ.3,64,900 என்ற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த தொலைக்காட்சியில் 4K டிஸ்ப்ளே, HDR என்று கூறப்படும் ஹை டைனமிக் ரேஞ்ச் மற்றும் புதிய இமேஜ் பிராஸசர் ஆகிய அம்சங்கள் உள்ளன

இந்தியாவில் சோனி நிறுவனம் வெளியிடும் புதிய பிரேவியா OLED A1 தொலைக்காட்

மேலும் இந்த புதிய ரேவியா OLED A1 தொலைக்காட்சியில் புதிய ஒலி அம்சம் உள்ள வூஃபர்ஸ் உள்ளது. உலகின் முதல் மிகப்பெரிய ஸ்க்ரீனை கொண்ட தொலைக்காட்சி என்ற புகழை பெற்றுள்ள இந்த பிரேவியா OLED A1 தொலைக்காட்சி இரண்டு மாடல்களில் வெளியாகியுள்ளது.

இவை 65 இன்ஸ் டிஸ்ப்ளே உள்ள KD-65A1 என்ற மாடலும் 55 இன்ஸ் ஸ்க்ரீனை கொண்ட KD-55A1 என்ற மாடலும் ஆகும். இவற்றில் KD-65A1 மாடலின் விலை ரூ.4,64,900, என்பதும் KD-55A1 மாடல் ரூ.3,64,900 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய பிரேவியா OLED A1 தொலைக்காட்சியில் 8 மில்லியன் சுய ஒளியுடைய தனித்தனியாக கண்ட்ரோல் செய்யக்குடிய வகையில் OLED பிக்சல்ஸ் அமைந்துள்ளது. இதனால் இந்த தொலைக்காட்சியில் தெரியும் படங்கள் மிக மிக தெளிவாகவும், இதற்கு முன் ஏற்படாத அனுஅப்வமும், கலர், காண்ட்ராஸ்ட் ஆகியவை கற்பனைக்கும் எட்டாத வகையில் மிகப்பெரிய அளவிலும் இருக்கும்

இந்த 4K OLED பேனலின் ரெசலூசன் 3840x2160 பிக்சல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலில் 4K HDR அம்சம் நவீன தரத்தில் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த மாடலில் புதிய ஒலி அம்சம் உள்ள வூஃபர்ஸ் உள்ளது என்பதை பார்த்தோம். அதை தவிர இந்த தொலைக்காட்சியின் பின்புறத்தில் ஒரு துணை வூஃபரும் உள்ளது.

மேலும் இந்த தொலைக்காட்சியின் அனைத்து அம்சங்களும் ஸ்க்ரீனுக்கு பின்புறத்தில் உள்ளது. அதில் எழும் ஒலிகளுக்கு ஏற்ப மின்னும் வகை அம்சமும் உள்ளது.

65 இன்ச் சோனி பிராவியா A1 மாடலின் டைமன்ஷன் 1451mm x 834mmx 86mm உள்ளது. அதில் உள்ள ஸ்டாண்டை சேர்த்து கணக்கிட்டால் இதன் டைமன்ஷன் 1451mmx834 mmx339 mm என உள்ளது

அதேபோல் 55 இன்ச் சோனி பிராவியா A1 மாடல் தொலைக்காட்சியின் டைமன்ஷன் 1228 mm x711 mm x 86 mm ஆகவும், ஸ்டாண்ட் சேர்த்து 1228 mm x 711 mm x 339 mm ஆகவும் உள்ளது. மேலும் இந்த மாடலில் வாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல் வசதியும், ஐஆர் பிளாஸ்டர் வசதியும் உள்ளது.

இந்த மாடல் தொலைக்காட்சியில் HDR என்று கூறப்படும் ஹை டைனமிக் ரேஞ்ச் உள்ளது என்பதை பார்த்தோம். இந்த பிராஸசரால் நார்மல் நார்மல் 4K பிராஸசர் x1ஐ விட 40% அதிகமான 4K HDR பிராஸசர் X1 இருப்பது கூடுதல் சிறப்பு

மேலும் இந்த மாடல் தொலைக்காட்சி லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷனான 7.0 நெளகட் அமைந்துள்ளது. மேலும் இந்த தொலைக்காட்சியில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன், டேப்ளட், ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம். மேலும் இந்த தொலைக்காட்சி இந்திய மொழிகள் உள்பட 42 மொழிகளை சப்போர்ட் செய்யும்

இந்த அதிசயத்தக்க மாடல் தொலைக்காட்சி வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 15 வரை சில குறிப்பிட்ட டீலர்களிடம் மட்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம். சோனி ஷோரூம்களில் இந்த மாடல் வரும் ஆகஸ்ட் 4 முதல் விற்பனை செய்யப்படும்

Best Mobiles in India

Read more about:
English summary
The TVs from the Sony Bravia A1 arrive with 4K display, High Dynamic Range (HDR) support and a brand new image processor.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X