Home
News

SONY-ஆ கொக்கா.. தம்மாத்துண்டு இயர்பட்ஸ்.. ஆனா Sound தருமாறு.. புது Sony INZONE Buds விலை என்ன?

சோனி (Sony) நிறுவனத்தின் அடுத்த கண்கவர் படைப்பான சோனி இன்ஜோன் பட்ஸ் (Sony INZONE Buds) என்ற கேமிங் (gaming) TWS இயர்பட்ஸ் (earbuds) சாதனம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. இது 24 மணிநேர பிளே நேரத்தை வழங்குகிறது. முழு விபரம் இதோ.

சோனி நிறுவனம் சமீபத்தில் பிளே ஸ்டேஷன் 5 (PS5) சாதனத்தை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து நிறுவனம் கேமர்களை கவரும் பல கேட்ஜெட்களை (gamer gadgets) தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கேமர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த நிறுவனம் இப்போது சோனி இன்ஜோன் பட்ஸ் (Sony INZONE Buds In India) என்ற புதிய இயர்பட்ஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

SONY-ஆ கொக்கா.. தம்மாத்துண்டு இயர்பட்ஸ்.. ஆனா Sound தருமாறு..

இது சாதாரண ஆடியோ இயர்பட்ஸ் போல இல்லாமல், கேமர்களை (gamers) குஷிப்படுத்தும் பிரத்தியேகமான கேமிங் ஆடியோ (gaming audio) அனுபவத்தை ஆதரிக்கும் அம்சங்களை கொண்ட இயர்பட்ஸ் சாதனமாக வெளிவந்துள்ளது. தாறுமாறான அம்சங்களை பேக் செய்துள்ள இந்த புதிய Sony INZONE Buds பற்றிய சிறப்பம்சம் மற்றும் விலை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சோனி இன்ஜோன் பட்ஸ் (Sony INZONE Buds):

இந்த புதிய சோனி இன்ஜோன் பட்ஸ் சாதனம் இன்-இயர் டிசைன் (in-ear design) உடன் ரப்பர் டிப் மாடலாக வெளிவந்துள்ளது.இது 8.4mm டிரைவர்ஸ் உடன் ANC சப்போர்ட் ஆதரவுடன் கிரிஸ்டல் கிளியர் ஆடியோவை வழங்குகிறது. இது கேமர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த 30ms லோயே-லேடன்சி (low latency) அம்சத்தை கொண்டுள்ளது. இது குறைந்த சவுண்ட் டிலேவை வழங்கும் சிறந்த இயர்பட்ஸ் மாடலாக வெளிவந்துள்ளது.

இது LC3 codec அம்சத்துடன் ப்ளூடூத் லோ-எனர்ஜி ஆடியோ டிரான்ஸ்மிஷன் (Bluetooth Low Energy for audio transmission) அம்சத்துடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் இன்-பில்ட் மைக்ரோபோன் (microphone) உடன் AI நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் வருகிறது. இது 500 மில்லியன் வாய்ஸ் சாம்பிள் உடன் பேக்கிரவுண்ட் இரைச்சல்களை குறைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற பிளேயர்களுடன் விளையாடும் போது கிளியர் ஆடியோவை வழங்குகிறது.

SONY-ஆ கொக்கா.. தம்மாத்துண்டு இயர்பட்ஸ்.. ஆனா Sound தருமாறு..

இந்த புதிய சோனி இன்ஜோன் பட்ஸ் (Sony INZONE Buds) இயர்பட்ஸ் சாதனம் டச் கண்ட்ரோல் உடன் வருகிறது. இது இன்ஜோன் ஹப் (INZONE Hub) மூலம் கஸ்டமைஸ் விருப்பத்தையும் வழங்குகிறது. இது 12 மணி நேர பிளே டைம் நேரத்தை சிங்கிள் சார்ஜில் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் கூடுதல் பிளே நேரத்தையும் வழங்குகிறது.

சோனியின் தகவல் படி, சார்ஜிங் கேஸ் உடன் இந்த சோனி இயர்பட்ஸ் (SONY Earbuds) சாதனம் 24 மணி நேர பிளே டைம் (Play time) நேரத்தை வழங்குவதாக சோனி கூறியுள்ளது. இந்த சோனி இன்ஜோன் பட்ஸ் சாதனம் USB-C சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இதன் விற்பனை வரும் ஜனவரி 16ம் தேதி முதல் துவங்குகிறது.

சோனி இன்ஜோன் பட்ஸ் விலை (SONY INZONE Buds Price):

இதன் விலை பற்றி பேசுகியில், இந்த SONY INZONE Buds இயர்பட்ஸ் சாதனம் இந்திய சந்தையில் ரூ.17,990 என்ற விற்பனை விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சோனி வலைத்தளம், அமேசான், பிளிப்கார்ட், ஷாப்அட்SC போன்ற ஆன்லைன் வழி மற்றும் சோனி ரீடைல் ஸ்டோர்ஸ் மற்றும் சில்லறை விற்பனையாளர் ஆப்லைன் கடைகள் வழியாகவும் விற்பனைக்கு வாங்க கிடைக்கும். இது பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
SONY INZONE Buds Gaming TWS Earbuds Launched In India Check Specification and Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X