சோனி சோனிதான்: 4கே HDR டிவி இந்தியாவில் அறிமுகம்., விலை தெரியுமா?

|

சோனி நிறுவனம் ப்ராவியா எக்ஸ் 8000 ஹெச் மற்றும் எக்ஸ் 7500 ஹெச் 4கே ஹெச்டிஆர் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

புதிய ரேஞ்ச் 4 கே ஹெச்டிஆர்

புதிய ரேஞ்ச் 4 கே ஹெச்டிஆர்

சோனி இன்று தனது புதிய ரேஞ்ச் 4 கே ஹெச்டிஆர் ஸ்மார்ட் டிவியை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் டிவியானது எக்ஸ் 8000 ஹெச், எக்ஸ் 7500 ஹெச் 4கே ஹெச்டிஆர் டிவி தொடர்களை நிறுவனம் ரூ.79,9000 இல் இருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய வகை ஸ்மார்ட் டிவி

புதிய வகை ஸ்மார்ட் டிவி

சோனி வகை டிவிகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் தான் சோனி தங்களது புதிய வகை ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. 85*8000ஹெச் ஸ்மார்ட் டிவி விலை ரூ.5,99,990 எனவும் அதேபோல் 65*8000ஹெச் ஸ்மார்ட் டிவி விலை ரூ.1,39,990 எனவும் 55*7500 ஹெச் ஸ்மார்ட் டிவி ரூ.79,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இகாமர்ஸ் போர்ட்டல்களில் கிடைக்கும்

இகாமர்ஸ் போர்ட்டல்களில் கிடைக்கும்

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த ஸ்மார்ட் டிவிகளானது, அனைத்து சோனி மையங்களிலும் இந்தியாவில் உள்ள முக்கிய மின்னணு கடைகள் மற்றும் இகாமர்ஸ் போர்ட்டல்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த ஸ்மார்ட் டிவி வாங்கும் போது 5 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

எச்டிஆர் ரீமாஸ்டர் தொழில்நுட்பம்

எச்டிஆர் ரீமாஸ்டர் தொழில்நுட்பம்

சோனியின் புதிய 4 கே எச்டிஆர் டிவியானது எக்ஸ் 8000 ஹெச் பிரிவின் கீழ் 216 செ.மீ (85), 189 செ.மீ (75), 165 செ.மீ (65), 140 செ.மீ (55), 123 செ.மீ (49) ஆகியவைகளும் 108 செ.மீ (43) மற்றும் 140 செ.மீ (55) ) ஆகியவை X7500H பிரிவின் கீழ் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது கான்ட்ராஸ்ட் குறிப்பு வண்ணங்களை மேம்படுத்த பொருள் சார்ந்த எச்டிஆர் ரீமாஸ்டர் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

4 கே தெளிவுத்திறன் டிஸ்ப்ளே

4 கே தெளிவுத்திறன் டிஸ்ப்ளே

X7500H தொடர் எக்ஸ் 1, 4 கே பிக்சர் செயலியுடன் வருகிறது. இரண்டு தொடர்களும் 4 கே எக்ஸ்-ரியாலிட்டி புரோவுடன் வெளிவருகிறது. இது ட்ரிலுமினோஸ் டிஸ்ப்ளேவுடன் 2 கே மற்றும் முழு எச்டி படங்களை 4 கே தெளிவுத்திறனுடன் காட்சிப்படுத்துகிறது. இந்த டிஸ்ப்ளேயானது அதீத வண்ணங்கள் நிறைந்த காட்சியை காண்பிக்கிறது.

புதிய சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்பீக்கர்கள்

புதிய சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்பீக்கர்கள்

ஆடியோவைப் பொறுத்தவரை, X8000H புதிய சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொடரானது மேம்பட்ட ஒலி அனுபவத்தோடு டால்பி அட்மோஸுடனும் வருகிறது, அதே நேரத்தில் எக்ஸ் 7500 எச் தொடரில் பாஸ் ரிஃப்ளெக்ஸ் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது, இது திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் இசைக்கு பொருத்தார்போல் ஃபைனல் அவுட்புட் ஆடியோவை வழங்குகிறது.

Android 9.0 Pie மூலம் இயக்கப்படுகிறது

Android 9.0 Pie மூலம் இயக்கப்படுகிறது

ஸ்மார்ட் டிவி தொடர் Android 9.0 Pie இல் இயங்குகிறது, மேலும் இது சோனியின் அசல் UI மெனுக்கள் மற்றும் குரல் கட்டுப்பாடுகளுடன் வருகிறது. தனக்கென உள்ள தனி சிறப்பான காட்சிகளை இந்த புதிய அறிமுகத்தில் சோனி வழங்குகிறது. அதோடு எக்ஸ் 8000 எச் தொடர் ஏர்ப்ளே மற்றும் ஆப்பிள் ஹோம் கிட் ஆதரவையும் ஆதரிக்கிறது. இதில் உள்ள ரிமோட் அனுபவம் யூஸர் பிரண்ட்லியாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Sony introduced bravia X8000H and X7500H 4K HDR TV series in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X