கத்ரினா கைப் வெளியிடப்போகும் சோனி போன்கள்....அடுத்தவாரம் வருதாம்!

Written By:

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சோனி நிறுவனத்தின் எக்பீரியா Z மற்றும் எக்பீரியா ZL ஆகியவை அடுத்தவாரம் வெளியிடப்போவதாக, சோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூடவே எக்பீரியா Z டேப்லெட் கணினியையும் வெளியிடவுள்ளார்கள்.

கத்ரினா கைப் வெளியிடப்போகும் சோனி போன்கள்....அடுத்தவாரம் வருதாம்!

காதலியின் 'பின்னால்' உலகம்சுற்றிய புகைப்படக்காரரின் படங்கள்...

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்காக நடத்தப்பட்ட விழாவில், இந்நிறுவனத்தின் விளம்பரத்தூதராக உள்ள ஹிந்தி நடிகை கத்ரினா கைப்பும் கலந்துகொண்டார். மேலும் அடுத்தவாரம் தலைநகர் புது டெல்லியில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் இந்த புதிய போன்களை வெளியிடப்போவதும் கத்ரினாதான்.

இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் விலைகள், எக்பீரியா Zஆனது ரூ.38,990க்கும், எக்பீரியா ZL ரூ.36,990க்கும் விற்கப்படுமென இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவற்றின் நுட்பக்கூறுகளை பொருத்தவரையிலும்,

  • 5 அங்குல HD தொடுதிரை,
  • 1.5 GHz செயலி,
  • ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
  • 13 எம்பி கேமரா,
  • 2 ஜிபி ரேம்,
  • ப்ளுடூத், Wifi போன்ற வசதிகள் உள்ளன.

எக்பீரியா Z டேப்லெட்டின் விலை சாரியாக தெரிவிக்கப்படவில்லை.

Gadgets Gallery Collction

 Please Wait while comments are loading...

சமூக வலைதளம்