1 கோடி சோனி பிளே ஸ்டேஷன் 5 சாதனங்கள் விற்பனை.. சோனியின் முந்தைய சாதனை முறியடிக்கப்படுமா?

|

சோனி நிறுவனம் பல வருடத் தாமதத்திற்குப் பிறகு இறுதியாக பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் சாதனத்தை அறிமுகம் செய்தது. பல மாத எதிர்பார்ப்பிற்குப் பின்னர், சோனி நிறுவனம் அதன் இறுதி வடிவமைப்பு டிசைனை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. இந்த டிசைனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அறிமுகத்திற்கு முன்னரே மக்கள் இதை முன்பதிவு செய்ய அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

1 கோடி சோனி பிளே ஸ்டேஷன் 5 சாதனங்கள் விற்பனை.. சோனியின் முந்தைய சாதனை?

அதற்கு பின்னர், சமீபத்தில் தனது விற்பனையைத் துவங்கிய சோனி கார்ப்பரேஷன் நிறுவனம், தனது பிளே ஸ்டேஷன் 5 கன்சோல் சாதனத்தை உலகளாவிய விற்பனையில் சுமார் ஒரு கோடி யூனிட்களுக்கும் மேலான யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டில் அதிவேகமாக விற்பனை ஆகும் பிளே ஸ்டேஷன் கன்சோல்களில் சோனியின் பிளே ஸ்டேஷன் 5 அதிக விற்பனையாகி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப் படி சுமார் 45 லட்சம் பிளே ஸ்டேஷன் 5 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. அதற்குப் பின்னர் இந்த ஆண்டின் மார்ச் மாதம் இறுதிக்குள் சுமார் 78 லட்சம் சோனி பிளே ஸ்டேஷன் 5 யூனிட்கள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன்படி, கணக்கிட்டுப் பார்த்தால் நிறுவனம் இது வரை மொத்தமாக சுமார் ஒரு கோடி பிளே ஸ்டேஷன் 5 யூனிட்களை வெறும் எட்டு மாதத்தில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இன்னும் பல முக்கிய நகரங்களில், சோனி பிளே ஸ்டேஷன் 5 சாதனத்திற்கான ஸ்டாக் இல்லாததால் மக்கள் முன்பதிவு செய்துவிட்டு அடுத்த ஸ்டாக் வருவதற்காகக் காத்திருப்பதாகச் சோனி அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரி தகவல் அளித்துள்ளார். வழக்கத்தை விட இந்த ஆண்டு பிளே ஸ்டேஷன்னுக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முந்தைய பிளே ஸ்டேஷன் 4 கன்சோலின் விற்பனையானது பத்து கோடி யூனிட்களை ஆறு ஆண்டுகளில் எட்டியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த புதிய பிளே ஸ்டேஷன் 5 சாதனம், இதன் முன்னர் மாடலை விட மிக அதிகமான யூனிட்களை விற்பனை செய்து, சோனியின் முந்தைய சாதனையை முறியடிக்கும் என்று நிறுவனம் நம்புகிறது. சோனி நிறுவனத்தின் முந்தைய மைல்கல்லை இந்த புதிய சாதனம் எவ்வளவு சீக்கிரம் கைப்பற்றும் என்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Sony has sold 10 million PS5 consoles with short period of time : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X