வீட்டையே தியேட்டராக மாற்றலாம்., இது மட்டும் போதும்: அறிமுகமானது புதுமாடல் சோனி பிராவியா ஸ்மார்ட்டிவி!

|

சோனி பிராவியா எக்ஸ்ஆர் எக்ஸ்90கே ஸ்மார்ட்டிவி தொடரை சோனி நிறுவனம் இந்தியாவில் இன்று (ஜூன் 6) அறிமுகம் செய்துள்ளது. பிராவியா XR X90K தொடரில் 75 இன்ச் (XR-75X90K),65 இன்ச் (XR-65X90K) மற்றும் 55 இன்ச் (XR-55X90K) என வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுடன் மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து மாடல்களும் 4கே உயர்நிலை தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இந்த டிவிகளின் அனைத்து மாடல்களும் எல்இடி பேனல் மற்றும் எக்ஸ்ஆர் ட்ரைலுமினோஸ் ப்ரோ தொழில்நுட்பத்துடன் வெளிவந்திருக்கிறது. டால்பி அட்மாஸ், அக்வாஸ்டிக் மல்டி ஆடியோ மற்றும் 3டி சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்ப ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட்டிவியில் இடம்பெற்றிருக்கிறது.

அறிமுகமானது புதுமாடல் சோனி பிராவியா ஸ்மார்ட்டிவி: வேறலெவல் அம்சங்கள்!

சோனி 75 இன்ச் (XR-75X90K),65 இன்ச் (XR-65X90K) மற்றும் 55 இன்ச் (XR-55X90K) ஸ்மார்ட்டிவிகளின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், 55 இன்ச் (XR-55X90K) மாடல் ஸ்மார்ட்டிவியானது ரூ.1,23,490 எனவும் 65 இன்ச் (XR-65X90K) மாடல் ரூ.1,70,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது 75 இன்ச் (XR-75X90K) மாடல் விலை தற்போதுவரை அறிவிக்கப்படவில்லை, இதன் விலையை சோனி விரைவில் அறிவிக்கும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிகள் ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து சோனி மையங்கள், முக்கிய சில்லறை விற்பனை கடைகள் மற்றும் இ-காமர்ஸ் போர்டல்களில் கிடைக்கும்

சோனி பிராவியா எக்ஸ்ஆர் எக்ஸ்90கே மாடல் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்டிவி ஆனது எல்இடி பேனல்கள் 4கே (3,840x2,160 பிக்சல்கள்) தீர்மானத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது 100 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியைக் கொண்டிருக்கிறது. தெளிவான மற்றும் பிரகாசமான காட்சிகளுக்கு என இந்த ஸ்மார்ட்டிவியில் எக்ஸ்ஆர் 4கே உயர்நிலை மற்றும் எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி தொழில்நுட்பம் இருக்கிறது.

அறிமுகமானது புதுமாடல் சோனி பிராவியா ஸ்மார்ட்டிவி: வேறலெவல் அம்சங்கள்!

இந்த ஸ்மார்ட்டிவியானது இரண்டு முழு அளவிலான பாஸ் ரீஃப்ளெக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் 40 வாட்ஸ் ஒருங்கிணைந்த ஆடியோ வெளியீட்டைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் இரண்டு டுவிட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. X90K தொடரின் ஆடியோ செயல்திறன் குறித்து பார்க்கையில், டால்பி அட்மோஸ், எக்ஸ்ஆர் சரவுண்ட் பொசிஷன், அகாஸ்டிக் மல்டி ஆடியோ மற்றும் 3டி சரவுண்ட் சரவுண்ட் தொழில்நுட்ப ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பிரபல ஸ்ட்ரீமிங் இயங்குதளம் உட்பட பிற பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இந்த ஸ்மார்ட்டிவி அனுமதிக்கிறது. ஐபாட்கள் மற்றும் ஐபோன்கள் போன்ற ஆப்பிள் சாதனங்களுடன் தடையின்றி ஒருங்கிணைப்பதற்காக இந்த டிவிகள் Apple Home Kit மற்றும் AirPlay ஆகியவற்றை ஆதரிக்கின்றன.

அறிமுகமானது புதுமாடல் சோனி பிராவியா ஸ்மார்ட்டிவி: வேறலெவல் அம்சங்கள்!

கடந்த மாதம் சோனி நிறுவனம் இந்தியாவில் சோனி நிறுவனம் பிராவ்யா 32W830K கூகுள் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்டிவி டால்பி ஆடியோ மற்றும் க்ளியர் ஃபேஸ் அம்சத்திற்கான ஆதரவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.28,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்டிவியானது 20 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. சோனி பிராவ்யா 32W830K கூகுள் டிவியானது 32 இன்ச் டிஸ்ப்ளே அளவில் கிடைக்கிறது. இந்த சோனி டிவியானது சோனி டிவியானது எச்டி ரெடி ஆதரவோடு, எச்டிஆர்10 மற்றும் எச்எல்ஜி வடிவங்களை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவியின் டிஸ்ப்ளே பேனல் ஆனது 1368×768 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. கூகுள் அசிஸ்டென்ட், ஓகே கூகுள் வாய்ஸ் தேடல் உள்ளிட்ட பல்வேறு கூகுள் ஆதரவுகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஒருங்கிணைந்த க்ரோம்காஸ்ட் மற்றும் ஆப்பிள் ஹோம்கிட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சோனி பிராவ்யா 32W830K ஸ்மார்ட்டிவியானது எக்ஸ் ப்ரொடெக்ஷன் ப்ரோ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்டிவியின் தூசி மற்றும் ஈரப்பத எதிர்ப்பு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Sony Bravia XR X90K Series Smart TV Launched with Full LED Panels: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X