டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்

|

சோனி இந்தியாவில் 4கே அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்ப்ளே உடனான பிராவ்யா எக்ஸ்75கே டிவி தொடர் டிவியை அறிவித்திருக்கிறது. கூகுள் டிவி, 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளேக்கள் மற்றும் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய புதிய பிராவ்யா எக்ஸ்75கே தொடர் டிவிகளை சோனி அறிவித்திருக்கிறது.

சோனி இந்தியா 4கே அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்ப்ளே

சோனி இந்தியா 4கே அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்ப்ளே

சோனி இந்தியாவில் 4கே அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்ப்ளே உடனான பிராவ்யா எக்ஸ்75கே டிவி தொடர் டிவியை அறிவித்திருக்கிறது. கூகுள் டிவி, 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளேக்கள் மற்றும் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய புதிய பிராவ்யா எக்ஸ்75கே தொடர் டிவிகளை சோனி அறிவித்திருக்கிறது. சோனி பிராவ்யா எக்ஸ்75கே தொடர் ஸ்மார்ட்டிவிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோனி பிராவ்யா எக்ஸ்75கே தொடர் நான்கு மாடல்களில் வருகின்றன. சோனி பிராவ்யா எக்ஸ்75கே சீரிஸ் டிவியானது ரூ.55,990 என்ற விலை முதல் தொடங்குகிறது.

புதிய பிராவ்யா எக்ஸ்75கே டிவி தொடர்

புதிய பிராவ்யா எக்ஸ்75கே டிவி தொடர்

சோனி இந்தியா இன்று 4கே அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட புதிய பிராவ்யா எக்ஸ்75கே டிவி தொடரை அறிமுகப்படுத்துகிறது. பிராவ்யா எக்ஸ்75கே ஸ்மார்ட்டிவியானது 65 இன்ச், 55 இன்ச், 50 இந்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. புதிய எக்ஸ்75கே ஸ்மார்ட்டிவியானது எக்ஸ்1 பிக்சர் செயலியை உள்ளடக்கி இருக்கிறது. இந்த எக்ஸ்1 செயலியானது இதன் சத்தத்தை குறைக்க மற்றும் விவரங்களை அதிகரிக்க மேம்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துகிறது.

சோனி பிராவ்யா எக்ஸ்75கே டிவி ஸ்மார்ட்டிவி

சோனி பிராவ்யா எக்ஸ்75கே டிவி ஸ்மார்ட்டிவி

சோனி பிராவ்யா எக்ஸ்75கே டிவி ஸ்மார்ட்டிவியானது நான்கு மாடல்களில் கிடைக்கிறது. இதன் KD-43X75K ஸ்மார்ட்டிவியானது ரூ.55,990 என்ற விலையிலும், KD-50X75K ஸ்மார்ட்டிவியானது ரூ.66990 என்ற விலையிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள இரண்டு மாடல்கள் டிவிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. 43 இன்ச் மற்றும் 50 இன்ச் மாடல்கள் இன்று மே 2 முதல் வாங்குவதற்கு கிடைக்கும். பிற மாடல்களின் கிடைக்கும் தன்மை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

4கே தெளிவுத்திறன் ஆதரவு

4கே தெளிவுத்திறன் ஆதரவு

புதிய சோனி பிராவ்யா எக்ஸ்75கே ஸ்மார்ட்டிவியானது இந்தியாவில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வருகிறது. 2கே மற்றும் முழு எச்டி தொழில்நுட்பத்துடன் படமாக்கப்பட்ட 4கே எக்ஸ் ரியாலிட்டி ப்ரோ மூலம் 4கே தெளிவுத்திறன் ஆதரவோடு வருகிறது. மோஷன் ஃப்ளோ எக்ஸ்ஆர் உடன் வேகமாக நகரும் காட்சிகளில் கூட பயனர்கள் கூர்மையான காட்சி அனுபவத்தை பெறலாம். இந்த புதுமையான தொழில்நுட்பமானது அசல் பிரேம்கள் காட்சிகளில் கூட கூடுதல் காட்சி அனுபவத்தை உருவாக்கி வழங்குகிறது.

டால்பி ஆடியோ ஆதரவு

டால்பி ஆடியோ ஆதரவு

பிராவ்யா எக்ஸ்75கே ஸ்மார்ட்டிவியானது டால்பி ஆடியோ ஆதரவு உடனான 50 வாட்ஸ் ஒலியை வெளிப்படுத்தும் இதில் ட்வின் ஸ்பீக்கர்களுடன் ஓபன் பேஃபில் டவுன் ஃபயர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் ஓபன் பேஃபிள் ஸ்பீக்கர்களானது திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் இசைக்கு ஏற்ப மேம்பட்ட ஒலி ஆதரவை அளவிட்டு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தெளிவான தொழில்நுட்பத்துக்கு என ஸ்பீக்கரின் வெளிப்பாடுகளில் உள்ள பிழைகளை கண்டறிந்து பகுப்பாய்வு செய்து அவற்றை ஈடுகட்டுவதற்கு என சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை பிராவ்யா வழங்குகிறது.

பல சாதனங்களின் ஒருங்கிணைப்பு அணுகல்

பல சாதனங்களின் ஒருங்கிணைப்பு அணுகல்

இந்த ஸ்மார்ட்டிவிகளில் கூகுள் டிவி ஓஸ் ஆதரவு உட்பட 700,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், நேரலை டிவி உள்ளிட்ட பல செயலிகளின் சந்தாக்கள் ஒருங்கிணைப்பு அணுகலை அனுமதிக்கிறது. பயனர்கள் கூகுள் தேடலின் மூலம் தங்களின் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பிற சாதனங்களை கண்காணிப்பு பட்டியலில் இணைத்தும் ஒருங்கிணைத்து அணுகலாம். பிராவ்யா எக்ஸ்75கே ஆனது ஆப்பிள் ஹோம் கிட் மற்றும் ஏர்ப்ளே அம்சத்தை ஆதரிக்கிறது, இது ஐபாட்ஸ் மற்றும் ஐபோன்கள் போன்ற ஆப்பிள் சாதனங்களை டிவியுடன் சிரமமின்றி உள்ளடக்க ஸ்ட்ரீமிங்கிற்காக ஒருங்கிணைக்கிறது. இது வாய்ஸ் தேடல் அணுகலையும் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிராவ்யா எக்ஸ்75கே தொடர் டிவியானது மேம்படுத்தப்பட்ட X-Protection PRO தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவை சோனியின் மின்னல் சோதனைகளில் மிக உயர்ந்த தரத்தில் தேர்ச்சி பெறுகிறது, அதாவது அவை உயர்ந்த தூசி மற்றும் ஈரப்பதத்துடன் கூடிய பாதுகாப்புடன் செயல்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Sony BRAVIA X75K SmartTV Series Launched in India with Google TV, 4k Ultra Hd Display and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X