அப்படி இருக்கு- சோனி பிராவ்யா 32W830K கூகுள் டிவி அறிமுகம்: எக்ஸ் பாதுகாப்பு, தெளிவான பேஸ் சவுண்ட்!

|

சோனி நிறுவனம் பிராவ்யா 32W830K கூகுள் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சோனி பிராவ்யா 32W830K ஸ்மார்ட்டிவி என்பது சோனியின் சமீபத்திய டிவி ஆகும். இந்த ஸ்மார்ட்டிவி டால்பி ஆடியோ மற்றும் க்ளியர் ஃபேஸ் அம்சத்திற்கான ஆதரவோடு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.28,990 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.

சோனி இந்தியா புதிய ஸ்மார்ட்டிவி

சோனி இந்தியா புதிய ஸ்மார்ட்டிவி

சோனி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவி எக்ஸ் ப்ரொடெக்ஷன் ப்ரோ தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது 20 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. சோனி பிராவ்யா 32W830K ஸ்மார்ட்டிவி என்பது சோனியின் சமீபத்திய டிவி ஆகும். இந்த ஸ்மார்ட்டிவி டால்பி ஆடியோ மற்றும் க்ளியர் ஃபேஸ் அம்சத்திற்கான ஆதரவோடு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.

சோனி பிராவ்யா 32W830K கூகுள் டிவி

சோனி பிராவ்யா 32W830K கூகுள் டிவி

சோனி நிறுவனம் இன்று இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் சோனி பிராவ்யா 32W830K கூகுள் டிவியை 32 இன்ச் டிஸ்ப்ளே அளவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய சோனி டிவியானது எச்டி ரெடி ஆதரவோடு, எச்டிஆர்10 மற்றும் எச்எல்ஜி வடிவங்களை கொண்டிருக்கிறது. சோனி பிராவ்யா 32W830K கூகுள் டிவியின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்தியாவில் சோனி பிராவ்யா 32W830K கூகுள் டிவியின் புதிய விலை ரூ.28,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடல் டிவியானது இன்றுமுதல் இந்தியாவில் உள்ள அனைத்து சோனி மையங்களிலும் கிடைக்கும். அதேபோல் முக்கிய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இ-காமர்ஸ் கடைகளில் இது கிடைக்கும்.

சோனி பிராவ்யா 32W830K சிறப்பம்சங்கள்

சோனி பிராவ்யா 32W830K சிறப்பம்சங்கள்

சோனி பிராவ்யா 32W830K சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்டிவியானது எச்டிஆர்10 மற்றும் எச்எல்ஜி வடிவங்களுக்கான ஆதரவுடன் வருகிறது. இது 32 இன்ச் எச்டி ரெடி மற்றும் எல்இடி டிஸ்ப்ளே பேனலைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே பேனல் ஆனது 1368×768 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது.

கூகுள் டிவி மற்றும் ஓகே கூகுள் வாய்ஸ் தேடல் அணுகல்

கூகுள் டிவி மற்றும் ஓகே கூகுள் வாய்ஸ் தேடல் அணுகல்

சோனி பிராவ்யா 32W830K என்ற புதிய ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தில் இயங்குகிறது. இது கூகுள் டிவி மற்றும் ஓகே கூகுள் வாய்ஸ் தேடல் அணுகலோடு வருகிறது. இது கூகுள் அசிஸ்டென்ட்டுக்கான ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது தொகுக்கப்பட்ட வாய்ஸ் ரிமோட் அணுகல் மற்றும் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை பயன்படுத்தி இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஒருங்கிணைந்த க்ரோம்காஸ்ட் மற்றும் ஆப்பிள் ஹோம்கிட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

20 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ

20 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ

சோனி பிராவ்யா 32W830K ஸ்மார்ட்டிவியில் ஆடியோ ஆதரவுக்கு என 20 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ மற்றும் க்ளியர் ஃபேஸ் அம்ச ஆதரவோடு வருகிறது. இது தெளிவான தொழில்நுட்பமாக இயங்குகிறது. ஸ்பீக்கர் அதிர்வெண் ஆனது அதிக துல்லியத்தின் மாதிரி செய்வதன் மூலம் ஸ்பீக்கரின் வெளிப்பாட்டில் உள்ள பிழைகளை பகுப்பாய்வு செய்து தெளிவான துல்லியமான காட்சி அனுபத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவி தூயமான மற்றும் இயற்கையான ஆடியோ உருவாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

எக்ஸ் ப்ரொடெக்ஷன் ப்ரோ தொழில்நுட்பம்

எக்ஸ் ப்ரொடெக்ஷன் ப்ரோ தொழில்நுட்பம்

மேலும் இந்த சோனி பிராவ்யா 32W830K ஸ்மார்ட்டிவியானது எக்ஸ் ப்ரொடெக்ஷன் ப்ரோ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்டிவியின் தூசி மற்றும் ஈரப்பத எதிர்ப்பு பாதுகாப்போடு வருகிறது. சோனி கூகுள் டிவியானது மின்னல் சோதனைகளில் மிக உயர்ந்த தரநிலைகளிலும் அதிக தேர்ச்சி அனுபவத்தை பெற்றிருக்கிறது. அதாவது உங்கள் டிவியானது மின்னல் தாக்குதல் மற்றும் அதிக மின்சார வெளிப்பாட்டில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இணைப்பு ஆதரவுக்கு என டிவியில் மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் ஒரு ஈதர்நெட் போர்ட், இரண்டு ஆடியோ உள்ளீடுகள், ப்ளூடூத் 5 மற்றும் வைஃபை ஆதரவோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Sony Bravia 32W830K Google TV Launched in India with X-Protection Pro, Dolby Sound

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X