பட்ஜெட் விலையில் சோனி ஸ்மார்ட்போன்.!!
வரலாற்றில் இது கொஞ்சம் புதியது தான், சோனி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிவித்துள்ளது. இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏ கருவிகளை அறிவித்ததை தொடர்ந்து சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா இ5 என்ற கருவியை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி இந்த கருவி பட்ஜெட் விலையில் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.

1
எக்ஸ்பீரியா இ5 கருவியில் 5 இன்ச் எச்டி 1280*720 பிக்சல் டிஸ்ப்ளேவும், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலும் கிடைக்கின்றது.

2
மீடியாடெக் 6735 குவாட்கோர் சிப்செட், 1.5 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 200 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

3
கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, Exmor RS சென்சார், சோனியின் ஹைப்ரிட் ஆட்டோஃபோகஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. செல்பீ கேமராவை பொருத்த வரை 8 எம்பி சென்சார் மற்றும் 88 டிகிரி வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

4
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, டூயல் சிம், வை-பை, ப்ளூடூத் மற்றும் 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

5
இந்த கருவி ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் மூலம் இயங்குகின்றது. இதன் விற்பனை ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிகா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளிலும் துவங்கும்.

6
சோனி எக்ஸ்பீரியா இ5 கருவியானது 199 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000க்கு விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

7
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ கருவியின் விலை சற்றே அதிகமாகவும் விலைக்கு ஏற்ப கூடுதல் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

8
அதன் படி சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ 5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரை 720 பிக்சல் ரெசல்யூஷன், 2.5டி வளைந்த கிளாஸ் மற்றும் எட்ஜ்-டூ-எட்ஜ் பினிஷ் வழங்கப்பட்டுள்ளது.

9
இந்த கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் மீடியாடெக் ஹீலியோ பி10 64-பிட் ஆக்டா கோர் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

10
மெமரியை பொருத்த வரை 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் 2,300 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications