காதலர் தினத்தை சோனியோடு கொண்டாடுங்கள்: அட்டகாச தள்ளுபடி அறிவிப்பு!

|

சோனி நிறுவனம் நாய்ஸ் கேன்சலேஷன் ஹெட்போன்கள், டிடபிள்யூஎஸ் இயர்போன்கள் மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

காதலர் தின சலுகை

காதலர் தின சலுகை

சோனி இந்தியா தனது காதலர் தின சலுகைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகையானது பிப்ரவரி 4 2021 முதல் தொடங்கி பிப்ரவரி 20 2021 வரை நடக்கிறது. இந்த தள்ளுபடி அறிவிப்பை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் பெறலாம்.

சோனி பிராவியா ஸ்மார்ட்டிவிகள்

சோனி பிராவியா ஸ்மார்ட்டிவிகள்

சோனி பிராவியா தொலைக்காட்சிகளும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பிட்ட பிராவிய தொலைக்காட்சிக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. பிராவியா ஓஎல்இடி 65, 55 அளவு மாடல்கள் ரூ.1,49,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ கார்டுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராவிய ஸ்மார்ட்டிவி வாங்கும்போது 5 சதவீதம் வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஹெட்போன்கள் தள்ளுபடி

40 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் அல்லது அதற்கு மேம்பட்ட பிராவிய ஸ்மார்ட்டிவிகள் சவுண்ட்பார்ஸ் காம்போவுடன் வாங்கும்போது ரூ.5000 தள்ளுபடி கிடைக்கிறது. WH-CH710N மாடல் ஹெட்செட்கள் ரூ.14,990-க்கு பதிலாக ரூ.7,990 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் WH-H910N ஹெட்போன்கள் ரூ.24,990 என்ற விலையில் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.14,990 ஆக கிடைக்கிறது.

டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்

WF-1000XM3 மாடல் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் விலை ரூ,19,990 இல் இருந்து ரூ.13,990 ஆக இருக்கிறது. WF-XB700 மாடல் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் விலை ரூ.11,990 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.7,990 என்ற விலையில் கிடைக்கிறது. WI-C200 ஹெட்போன்கள் விலை ரூ.2,990-ல் இருந்து ரூ.1,699 ஆக இருக்கிறது. WI-C310 மாடல் ஹெட்போன்கள் ரூ.3290 விலையில் இருந்து ரூ.2490 என்ற விலையில் கிடைக்கிறது.

ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் சலுகைகள்

அதேபோல் ப்ளூடூத் ஸ்பீக்கர் பொருத்தவரையில் SRS-XB402M ப்ளூடூத் ஸ்பீக்கர் முன்னதாக ரூ.24,990 என்ற விலையில் இருந்து ரூ.14,990 ஆK கிடைக்கிறது. அதேபோல் SRS-XB33 ப்ளூடூத் ஸ்பீக்கர் ரூ.15,990 இல் இருந்து ரூ.11,490 ஆக கிடைக்கிறது. அதேபோல் SRS-XB23 ப்ளூடூத் ஸ்பீக்கர் ரூ.10,990 விலையில் இருந்து ரூ.7,990 ஆக கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Sony Announced Valentine's Day Offers With Discount Price in Multiple Products

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X