சோனி வழங்கும் ஆன்ட்ராய்டு கைக் கடிகாரம்!

Posted By: Karthikeyan
சோனி வழங்கும் ஆன்ட்ராய்டு கைக் கடிகாரம்!

எல்லான கணினி சாதனங்களும் ஆன்ட்ராய்டு மயமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சோனி நிறுனம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு புதிய கைக்கடிகாரத்தைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய ஆன்ட்ராய்டு கடிகாரம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது.

இந்த கடிகாரத்தை ஆன்ட்ராய்டு போன்களோடு இணைத்துவிட்டால் இது சூப்பராக செயல்பட தொடங்கிவிடும். 1.3 இன்ச் திரையுடன் வரும் இந்த புதிய கடிகாரத்தில் பேஸ்புக், டுவீட்டுகள், இமெயில், குறுஞ்செய்திகள் போன்றவற்றைக் காணலாம். அதோடு இந்த கடிகாரத்தில் வரும் அழைப்புகளையும் எடுக்க முடியும்.

இந்த சோனி ஆன்ட்ராய்டு கடிகாரம் ரூ.6,299க்கு விற்கப்பட இருக்கிறது. மேலும் இது பல தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. இந்த கடிகாரத்தில் மல்டி டச் கொண்ட டிஸ்ப்ளே ஒஎல்இடி வசதி கொண்டது. இந்த கடிகாரத்தில் யுஎஸ்பி சார்ஜிங் கேபிள் உள்ளதால் இதை சார்ஜ் செய்ய முடியும்.

இந்த கடிகாரத்தை இன்னொரு போன் என்று அழைக்கலாம். இதை கைகளில் கட்டிக் கொள்ளலாம். இந்த கடிகாரம் ஒரு சில முக்கிய அப்ளிகேசன்களையும் கொண்டு வருகிறது.

இதன் டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக இருக்கும். இந்த பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்கும். இந்த கடிகாரத்தில் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆகியவை இல்லை. இதை ஆன்ட்ரோய்டு போன்களோடு இணைத்தால் மட்டுமே இது இயங்கும்.

அதே நேரத்தில் இந்த கடிகாரம் ப்ளூடூத் வசதி கொண்டு வருகிறது. மேலும் இது ஆன்ட்ராய்டு 2.1 இயங்கு தளத்தில் வருவதால் இதை பலர் விரும்பி வாங்கக் கூடும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்