Home
News

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்.. PS5 கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட Afeela EV கார்.. ஆளில்லாமல் ரிமோட் மூலம் இயக்கலாமா?

தொழில்நுட்பத்தால் நாம் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை அறிவியல் நிகழ்த்தி வருகிறது. அந்த வரிசையில் ஜப்பானின் மிக முக்கியமான இரண்டு நிறுவனங்களான சோனி (Sony) மற்றும் ஹோன்டா (Honda) கைகோர்த்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மின்னணு சாதன தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் சோனி மற்றும் வாகன உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை கொண்டிருக்கும் ஹோன்டா இரண்டும் இணைந்து ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் இயங்கவிருக்கும் அதிநவின கார் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த மின்னணு வாகனம் குறித்த சில தகவல்களை சென்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சி (Consumer Electronics Show, CES) வெளியிட்டது.

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்.. PS5 கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட Afeela EV கார்..

அந்த தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட சாதனையை இந்த ஆண்டின் மாநாட்டில் காட்சிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த சாதனை தான் அவர்களது அஃபீலா மின்னணு கார் (Afeela EV Car). இந்த கார் தொடர்பான தகவல் வெளியாக ஆரம்பித்ததில் இருந்தே அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் CES 2024 மாநாட்டில் சோனி ஹோன்டா மொபிலிட்டியின் (Sony Honda Mobility) தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான இசுமி கவானிஷி (Izumi Kawanishi) சோனியின் பிரபலமான பிஎஸ்5 கன்ட்ரோலரைக் (PS5 Controller) கொண்டு ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் அஃபீலா காரை மேடையில் இயக்கி காட்டியுள்ளார். இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வெகுவாக கவர்ந்தது.

இதனால் இந்த காரைப் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். அவர் கன்ட்ரோலரை கையாள்வதற்கு ஏற்றவாறு ஸ்டியரிங்கை வளைத்து அஃபீலா மேடை மேல் கம்பீரமாக வந்து நின்ற காட்சி எக்ஸ் (X) தளத்தில் இப்போது வைரலாகி வருகிறது. இப்போது வரை வெரும் கான்சப்ட் காராக (Concept Car) மட்டுமே இருக்கும் இந்த அஃபீலா கூடிய விரைவில் நிஜ பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்.. PS5 கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட Afeela EV கார்..

பிஎஸ்5 கண்ட்ரோலரால் இயப்படுவதை தாண்டி, மேலும் பல சிறப்புகள் இந்த அஃபீலா காருக்கு உண்டு. இந்த மின்னணு வாகனம் ஆல்-வீல்-ட்ரைவ் (All-wheel-drive) 400kW டூவல் மோடாரில் (Dual motor) இயங்குகிறது. அதிகபட்சமாக மணிக்கு 240km வேகத்தில் அதிவிரைவாக செல்லும் திறனுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் சராசரியாக 100km/h வேகத்தில் செல்லுமாம்.

அதுமட்டுமின்று 0-100km/h வேகத்தை வெறும் 4.8 விநாடிகளை அடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த இலக்கை நிஜ உலகில் அடையும் நோக்கில் தான் சோனி மற்றும் ஹோன்டா மொபிலிட்டி செயல்பட்டுவருகின்றதாம். செயல்பாட்டை தாண்டி மேலும் பல கவர்ச்சிகரமான அம்சங்களும் இந்த அஃபீலா காரில் உள்ளது. கேமிங் அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த காரில் கேமிங்கில் இருப்பது போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த காரில் டாஷ் போர்ட் டிஸ்ப்ளேயில் (Dashboard display) 3D க்ராஃபிக்ஸ் மற்றும் காட்சிகள் வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்காக எபிக் கேமின் அன்ரியல் என்ஜின் (Epic Gaming's Unreal Engine) 5.3 பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் 3D மேப்ஸ், விர்ச்சுவல் ஸ்பேசஸ் (Virtual Spaces) மற்றும் அகுமென்டட் ரியாலிட்டி காட்சிகள் (Augmented Reality Visuals) ஆகியவற்றை காரில் பயணம் செய்யும்போது கண்டுகளிக்கலாம்.

இந்த அம்சத்திற்காக இன்டர்நெட் சோர்ஸ்ட் மெட்டாடேட்டா ஓவர்லெய்ட் (internet-sourced metadata overlaid) உடன் இந்த அஃபீலா மின்னணு வாகனம் இணைக்கப்பட்டுள்ளது. இத்தனை கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வரவிருக்கும் இந்த அஃபீலா மின்னணு வாகனத்தில் விலை எவ்வளவு இருக்கும் என்பது குறித்த தகவல் இன்னும் வரவில்லை என்றாலும், 2026 ஆம் ஆண்டில் மனிதர்களின் நிஜ பயன்பாட்டிற்கு இது அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Afeela EV Car Drives Onto Stage By Izumi Kawanishi Using PS5 Controller
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X