சோனி A8H 4K ப்ரீமியம் டிவி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்!

|

சோனி A8H ஓஎல்இடி டிவி டால்பி விஷன் எச்டிஆர் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. பிற நிறுவன ப்ரீமியம் மாடல் டிவிகளுடன் ஒப்பிடுகையில் சோனியின் தனித்துவம் அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கிறது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சோனி ஏ8எச் அல்ட்ரா எச்டிஆர்

சோனி ஏ8எச் அல்ட்ரா எச்டிஆர்

சோனி ஏ8எச் அல்ட்ரா எச்டிஆர் ஓஎல்இடி டிவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 65 அங்குல மாடலில் விலை ரூ.2,79,990 ஆக உள்ளது. புதிய எல்இடி டிவி சோனியின் ப்ரீமியம் டிவி ரகத்தின் எச்டிஆர் எச்டி ஓஎல்இடி டிவி ஆகும். இது அல்ட்ரா எச்டி (3840x2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

விரைவில் 55 அங்குல டிவி

விரைவில் 55 அங்குல டிவி

சோனியின் சில்லறை விற்பனை கடைகள், சோனியின் ஆன்லைன் போர்டல், அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனை கடைகளில் இந்த டிவியை வாங்கலாம். 55 அங்குல மாடலின் விரைவில் கிடைக்கும் என சோனி அறிவித்துள்ளது. 65 அங்குல மாடல் தற்போதே கிடைக்கும்.

ப்ரீமியம் ரக தொலைக்காட்சி

ப்ரீமியம் ரக தொலைக்காட்சி

சோனி ஏ 8 எச் ஓஎல்இடி டிவியின் 65 அங்குல பதிப்பின் விலை ரூ .2,79,990 ஆகும். இது இந்தியாவின் ப்ரீமியம் ரக தொலைக்காட்சிகளில் இணைக்கப்பட்டுள்ளது. சாம்சங், எல்ஜி போன்ற ப்ரீமியம் ரக டிவிகளுடன் ஒப்பிடுகையில் சோனி எப்போதும் தனித்தே இருக்கிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.

Whatapp அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி ஒரு கிளிக் போதும் எளிதாக இதை செய்யலாம்!Whatapp அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி ஒரு கிளிக் போதும் எளிதாக இதை செய்யலாம்!

சோனி ஏ 8 எச் எல்இடி டிவி: அம்சங்கள்

சோனி ஏ 8 எச் எல்இடி டிவி: அம்சங்கள்

சோனி ஏ 8 எச் தொலைக்காட்சி அல்ட்ரா எச்டி (3840x2160 பிக்சல்) எல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது டால்பி விஷன் HDR அம்சத்தை ஆதரிக்கிறது. சோனியின் சவுண்ட் தொழில்நுட்பம் எப்போதும் தனி ரகமாகவே இருக்கும். இந்த ப்ரீமியம் தொலைக்காட்சியில் டால்பி அட்மோஸ் பலவித ஆடியோ அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த டிவி 30W சவுண்ட் சிஸ்டம் கொண்ட நான்கு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ப்ரீமியம் டிவி

ஆண்ட்ராய்டு ப்ரீமியம் டிவி

இந்த ஆண்ட்ராய்டு ப்ரீமியம் டிவி 16 ஜிபி உள் சேமிப்பகத்துடன் இயங்குகிறது. இதில் உள்ளமைக்கப்பட்ட Chromecast உடன் கூடுதலாக கூகிள் அசிஸ்டெண்ட், கூகிள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஏர்ப்ளே 2 சோனி A8H ஐ ஆதரிக்கிறது. இந்த ப்ரீமியம் டிவி சோனியின் எக்ஸ் 1 அல்டிமேட் பிக்சர் செயலி மற்றும் நிறுவனத்தின் ட்ரிலுமினோஸ் பிக்சர் என்ஹான்ஸ்மென்ட் டெக்னாலஜி மூலம் இயக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Sony A8H OLED TV Launched in India with Premium Features: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X