ஓல்டு இஸ் கோல்டு.. வைரல் ஆகும் 1986-ம் ஆண்டு SONY லேப்டாப்.. அம்சத்தை பார்த்த அசந்துடுவீங்க.. என்ன விலை?
இணையத்தில் தினசரி பல சுவாரசியமான தகவல்களை நாம் பார்த்து கடந்து வருகிறோம். என்ன தான் தினசரி குறைந்தது ஒரு 100 வீடியோவை பார்த்தாலும், அதில் சில குறிப்பிட்ட வீடியோ பதிவுகளை மட்டும் நம்மால் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அவற்றை ஒரு போதும் மறக்க முடியாது. அப்படியான ஒரு பதிவை தான் நாம் இன்று காண நேரிட்டது. அது தான் 1986 ஆம் உருவாக்கப்பட்ட சோனி (SONY) நிறுவனத்தின் முதல் தலைமுறை லேப்டாப் மாடலாகும்.
இப்போது நமது கையில் உள்ள லேப்டாப்களுக்கும் (Laptop), அன்றைய தேதியில் மக்கள் பயன்படுத்திய லேப்டாப்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? அதில் இருந்த அம்சங்களுக்கும், இப்போது நாம் பயன்படுத்தும் லேப்டாப்களில் உள்ள அம்சங்களுக்கும் எவ்வளவு தொழில்நுட்பம் (Technology) முன்னேறியுள்ளது என்பது போன்ற தகவலை புரிந்துகொள்ள இந்த பதிவு அனுமதிக்கிறது. இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பார்வையிட மறக்காதீர்கள்.

ஓல்டு இஸ் கோல்டு என்று சும்மாவா சொன்னார்கள், 1986 இல் சோனி கம்யூனிகேஷன் பிராடக்ட் கோ (Sony Communication Product Co.) நிறுவனதால் உருவாக்கப்பட்ட லேப்டாப் மாடலை தெளிவாக காண்பிக்கும் வீடியோ பதிவை X பக்கத்தில் Ian Miles Cheong என்ற பயனர் பதிவிட்டிருக்கிறார். இதில் ஒரு பழைய லெதர் பை காண்பிக்கப்படுகிறது. அதில் சோனி (SONY) என்ற லோகோ அச்சிடப்பட்டிருப்பதை அந்த நபர் சுட்டிக்காண்பிக்கிறார்.
ஜிப்பை திறந்தால், சதுரமாக ஒரு பெரிய வெள்ளை நிற இரும்பு பெட்டி நமது கண்களுக்கு தெரிகிறது. அதை பிரஸ் செய்து ஓபன் செய்தால், நமக்கு 1986 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பழைய சோனி மாடல் லேப்டாப் காண்பிக்கப்படுகிறது. இந்த லேப்டாப்பின் அணைத்து பக்கங்களும் அந்த வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. அதை திறந்த பின், மோனோகிறோம் டிஸ்பிளே, கீபோர்ட்ட், பிளாப்பி டிஸ்க் ரீடர் போன்றவை காண்பிக்கப்படுகிறது.
இந்த வீடியோ பதிவில், இந்த லேப்டாப் பற்றிய முழு தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. வீடியோ பதிவில் பொதுவாக இது 1986 ஆம் ஆண்டின் பழைய சோனி லேப்டாப் என்று மட்டும் கூறப்பட்டுளள்து. இது என்ன மாடல்? இதன் அம்சங்கள் என்ன? அன்றைய தினத்தில் இதன் விலை என்ன ஆராய்ந்து பார்த்தபோது தான் இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் நமக்கு கிடைத்தது. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.
வீடியோ பதிவில் நாம் பார்த்த சோனி லேப்டாப் மாடல் உண்மையில் SONY SMC-210 (M35) என்ற மாடலாகும். இது இன்டெல் 80C88 (Intel 80C88) என்ற பிராசஸருடன் செயல்பட்டுள்ளது. இது 4,77MHz சைக்கிள் டைமில் இயங்கியுள்ளது. இதன் ரேம் (RAM) மற்றும் ரோம் (ROM) விபரங்களை கேட்டால் நீங்கள் ஆடிப்போய்விடுவீர்கள். இந்த சோனி லேப்டாப்பில் நிறுவனம் 640KB ரேம் அம்சத்தையும், 64KB ரோம் அம்சத்தையும் வழங்கியுள்ளது.
இது நமது ஸ்மார்ட்போனில் இருக்கும் ரேம் மற்றும் ரோம் அம்சத்தை விட பல மடங்கு குறைந்தளவை கொண்டிருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லேப்டாப் சாதனம் RS-232C, பிரிண்டர் போர்ட் (printer port), சென்ட்ரோனிக்ஸ் ஸ்டாண்டர்ட் (Centronics standart) போர்ட் ஆகியவற்றை கொண்டிருந்திருக்கிறது. இது MS-DOS இயங்குதளத்தில் இயங்கியுள்ளது. இந்த லேப்டாப் கீபோர்டில் மொத்தமே வெறும் 83 கீ-கள் மட்டுமே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாம் 104 கீஸ்-களை கொண்ட கீபோர்டை பயன்படுத்துகிறோம். இந்த லேப்டாப் 33bps மோடம் ஆதரவை கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் டிஸ்பிளே பற்றி பேசுகையில், இது 25 lines x 80 columns கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளேவை 640 х 200 dots ரெசொலூஷன் உடன் கொண்டிருந்திருக்கிறது. இது எக்ஸ்டர்னல் மற்றும் இன்டெர்னல் டிஸ்க் ஆதரவை கொண்டுள்ளது.
டிஸ்க் என்றதும் CD அல்லது DVD என்று நினைத்துவிடாதீர்கள். இது பிளாப்பி டிஸ்க் ஆதரவை மட்டுமே கொண்டிருந்திருக்கிறது. இது இன்டர்னல் டிஸ்க் டிவைஸ் (Internal disk device) அதறவிற்காக 2 x 3,5″ FDD 720 KB ஆதரவையும், எக்ஸ்டர்னல் சேவைக்கு (External 5,25″ FDD) ஆதரவையும் இந்த சாதனம் கொண்டிருந்திருக்கிறது.
இதன் அளவு 4 x 11,4 x 3 இன்ச் என்றும், இதன் எடை 13 பவுண்ட் எடை என்றும் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இந்த 1986 ஆம் ஆண்டின் சோனி லேப்டாப் சாதனம் $ 2695 டாலர் விலையுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 2,27,658 மட்டுமே. வெறும் KB ஸ்டோரேஜ் உடன் இருந்த லேப்டாப்பிறகு இந்த விலையா? என்று சிலர் ஆச்சரியம் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications