தொடுதிரை வசதியுடன் சொனாட்டாவின் முதல் கைகடிகாரம்!

Posted By: Staff
தொடுதிரை வசதியுடன் சொனாட்டாவின் முதல் கைகடிகாரம்!

சொனாட்டா நிறுவனம் புதிய தொடுதிரை வசதி கொண்ட கைகாடிகரத்தை அறிமுகம் செய்கிறது. டைட்டன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சோனாட்டா பிராண்டு தனது முதல் தொடுதிரை வசதி கொண்ட புதிய கைகடிகாரத்தை அறிமுகப்படுத்துகிறது.

மல்டிஃபங்ஷன் வசதி கொண்ட இந்த வாட்ச் வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டது. இதனால் இது விளையாட்டுகளில் அதிகம் ஈடுபாடு உள்ளவர்கள் பயன்படுத்த உதவும். இந்த வாட்ச் திரையில் லைட் வசதி, மல்டி டைம் டிஸ்ப்ளே, நாள், கிழமை ஆகிய தகவலகளையும் வழங்கும். ஆனால் தேதி, கிழமை போன்ற இந்த தகவல்களை தொடுதிரையில்

பெறலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.

இந்த தொடுதிரை வசதி கொண்ட சொனேட்டா வாட்ச் ஒரு வருடம் வாரண்டியை வழங்கும். இந்த தொடுதிரை கொண்ட வாட்சில் நவீன வசதியினை பெற சாஃப்ட்வேர் ப்ரோக்கிராம்கள் செட் செய்யப்பட்டுள்ளது.

இதனால் நவீன மல்டிஃபங்ஷனல் வசதியினை இந்த வாட்சில் பெற முடியும். இந்தியா முழுவதும் சோனாட்டா ஸ்டோர்கள் மொத்தம் 8,000 வரை உள்ளன. இந்த தொடுதிரை வசதி கொண்ட வாட்ச் ரூ. 1,499 விலை கொண்டதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்