கடலே வத்தி போச்சுன்னா.. Twitter "வீழ்ந்தது".. இப்போ நெட்டிசன்ஸ் எங்கே போய் புலம்புவாங்க?

|

மிகவும் பிரபலமான சோஷியல் மீடியா தளங்களில் ஒன்றான ட்விட்டர் "செயல் இழந்துள்ளது", அதாவது 'டவுன்' ஆகி உள்ளது!

இந்தியா உட்பட, உலகெங்கிலும் உள்ள ட்விட்டர் (Twitter) பயனர்கள் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

கடும் நெருக்கடியில் நெட்டிசன்கள்!

கடும் நெருக்கடியில் நெட்டிசன்கள்!

வழக்கமாக வாட்ஸ்அப் செயல் இழந்தால் அல்லது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் செயல் இழந்தால்.. ஒட்டுமொத்த பயனர்களும் ட்விட்டருக்கு வந்து புகார் அளிப்பார்கள்.

ஆனால் இம்முறை ட்விட்டரே செயல் இழந்து உள்ளதால்.. நெட்டிசன்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்றே கூறலாம்.

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

மொபைல் ஆப்பில் சிக்கல் இல்லை!

மொபைல் ஆப்பில் சிக்கல் இல்லை!

நல்ல விஷயம் என்னவென்றால், டவிட்டர் தளமானது டெஸ்க்டாப் வெர்ஷனில் மட்டுமே செயல் இழந்துள்ளது. மொபைல் ஆப்பில் நன்றாகத்தான் வேலை செய்கிறது!

டெஸ்க்டாப் பயனர்கள் இன்று (நவம்பர் 4) காலை முதலே தங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்களை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர். ட்விட்டர் பக்கத்தில் எதையும் பார்க்க முடியாததால், பயனர்கள் தங்கள் Twitter Feed-ஐ அணுகுவதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

சம்திங் வென்ட் ராங்!

சம்திங் வென்ட் ராங்!

பலர் தங்களது டவிட்டர் அக்கவுண்டில் லாக்-இன் செய்ய முடியவில்லை என்று கூறுகின்றனர்.

ட்விட்டர் ஃபீட் பேஜ் ஆனது லோட் ஆகும்போது "Something went wrong, but don't worry - try again" என்கிற பாப்-அப் மெசேஜ் தோன்றுகிறது.

அதாவது ​​"ஏதோ தவறாகிவிட்டது, ஆனால் கவலைப்பட வேண்டாம் - மீண்டும் முயற்சிக்கவும்" என்கிற மெசேஜ் அணுக கிடைக்கிறது!

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

போன வாரம் இன்ஸ்டாகிராம்.. இந்த வாரம் ட்விட்டர்!

போன வாரம் இன்ஸ்டாகிராம்.. இந்த வாரம் ட்விட்டர்!

நினைவூட்டும் வண்ணம், கடந்த வாரம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்கள் இதேபோன்ற ஒரு சிக்கலை எதிர்கொண்டனர்.

"உங்கள் அக்கவுண்ட்டை நாங்கள் இடைநிறுத்திவிட்டோம்" என்கிற மெசேஜை கண்டு பலரும் ஷாக் ஆகினர்.

பிறகு இன்ஸ்டாகிராம் "உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று ட்வீட் செய்தது; அதனை தொடர்ந்து அந்த சிக்கலை சரியும் செய்தது!

அதற்கு முன்.. வாட்ஸ்அப்!

அதற்கு முன்.. வாட்ஸ்அப்!

முன்னதாக, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பும் கூட சில நிமிடங்களுக்கு செயல் இழந்தது.

இந்த செயல் இழப்பின் விளைவாக - மில்லியன் கணக்கான பயனர்களால் மெசேஜ்களையும், போட்டோக்களையும், வீடியோக்களையும் சிறிது நேரம் பகிர முடியாமல் போனது!

அந்த நேரத்தில் பெரும்பாலான பயனர்கள் வாட்ஸ்அப்பின் போட்டியாளரான டெலிகிராம் ஆப்பை அணுகினர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

Best Mobiles in India

English summary
Something went wrong on Twitter Many Users unable to log into their accounts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X