எஸ்பிஐ பயனர்கள் கவனத்திற்கு: குறிப்பிட்ட நேரத்துக்கு இந்த சேவை கிடையாது என தகவல்!

|

படிப்படியாக வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் இந்தியா காலத்தில், இப்போதே பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் மூலம் கிடைக்கிறது. விவசாயம் செய்ய விதை வாங்குவதிலிருந்து, வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள், மூவி டிக்கெட், ஆன்லைன் வங்கி சேவை, நமக்குத் தேவையான கடன் வசதி என்று எல்லாம் இப்போது ஆன்லைன் மூலமே நமக்குக் கிடைக்கிறது.

வங்கி நெட்வொர்க்

இந்தியாவில் மிகப்பெரிய வங்கி நெட்வொர்க் வைத்துள்ளது எஸ்பிஐ. குறிப்பாக நாடு முழுவதும் 22,000 வங்கி கிளைகள்மற்றும் 57,899 ஏடிஎம் இயந்திரங்களையும் வைத்து நிர்வாகம் செய்து வருகிறது எஸ்பிஐ வங்கி.

 டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை

இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை (இன்று) மாலையில் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக தற்காலிகமாக முடக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பொசுக்குன்னு வார்த்தைய விட்டிங்கிளே: இத இந்தியாவுக்கு கொடுக்குறதுல சுத்தமா விருப்பமில்ல- பில் கேட்ஸ்!பொசுக்குன்னு வார்த்தைய விட்டிங்கிளே: இத இந்தியாவுக்கு கொடுக்குறதுல சுத்தமா விருப்பமில்ல- பில் கேட்ஸ்!

சேவைகள் இன்று மாலை

எனவே இந்த டிஜிட்டல் சேவைகள் இன்று மாலை செயல்பாடாது என்பதால் எஸ்பிஐ வங்கி பயனர்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் இதுதொடர்பான தகவலை எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தடை அதை உடை புதுசரித்திரம் படை: சொந்தமாக புதிய வலைதளத்தை தொடங்கிய டிரம்ப்- அக்கவுண்ட் ஓபன் பண்ணலாமா?தடை அதை உடை புதுசரித்திரம் படை: சொந்தமாக புதிய வலைதளத்தை தொடங்கிய டிரம்ப்- அக்கவுண்ட் ஓபன் பண்ணலாமா?

மாலைக்குள் மக்கள் முன்கூட்டியே

மேலும் இன்று மாலைக்குள் மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வங்கி பணிகளை முடித்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் எஸ்பிஐ வங்கியின் யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை அனைத்தும் மெயின்டெனன்ஸ் பணிகாரணமாக முடங்கியது என்பது நம் அனைவருக்கும்தெரியும்.

இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்

இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த எஸ்பிஐ வங்கியின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவை தளத்தில் மே 7-ம் தேதி 22.15 முதல் மே 8 1.45 மணி வரையில் மெயின்டெனன்ஸ் பணிகள் நடைபெறும். எனவே இந்த காலத்தில் யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை போன்றவை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி தொழில்நுட்ப சோதனை: சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு.! சீன தூதரக செய்தி தொடர்பாளர் கருத்து.!5ஜி தொழில்நுட்ப சோதனை: சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு.! சீன தூதரக செய்தி தொடர்பாளர் கருத்து.!

பணிகள் மேற்கொள்வது மிகவும் அவசியம்.

இந்த எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், குறிப்பிட்ட நேரங்களில் சர்வர் மற்றும்இதர டிஜிட்டல் தளத்தில் மெயின்டெனன்ஸ் பணிகள் மேற்கொள் வேண்டியது கட்டாயமாக உள்ளது. குறிப்பாக ஒரு சில நேரங்களில் இந்த வங்கியின் டிஜிட்டல் தளத்தில் சில பிரச்சனைகள் வரும் என்பது அனைவரும் தெரியும். இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய இதுபோன்ற மெயின்டெனன்ஸ் பணிகள் மேற்கொள்வது மிகவும் அவசியம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Some services may not work due to maintenance of SBI Digital Services: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X