Home
News

ஐயா., நீங்களே ஒரு ஏலியன்னு சொல்றாங்களே- எலான் மஸ்கிற்கு வந்த சோதனை: அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

டுவிட்டரில் தனது ரசிகர்களுடனும் விமர்சகர்களுடனும் பழவதை எலான் மஸ்க் எப்போதும் தவிர்ப்பதில்லை. கிரிப்டோகரன்சி, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என அனைத்திலும் தனது கவனத்தை செலுத்தி வரும் எலான் மஸ்க் சமூகவலைதளங்களில் தன்னால் முடிந்தவரை தன்னை குறித்த கேள்விக்கு பதிலளித்து வருகிறார். பாகுபாடின்றி தன்னை குறித்த நகைச்சுவையான மீம்ஸ்களையும் அவர் மேற்கோள் காட்டுவார். ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று பயனர் ஒருவர் மஸ்க் இடம்பெறும் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

டுவிட்டர் பயனர் பதிவிட்ட வீடியோ

டுவிட்டர் பயனர் பதிவிட்ட வீடியோ

ஆகஸ்ட் 28 ஆம் தேதி அன்று Tesla Owners of Silicon Valley என்ற பெயர் கொண்ட பயனர் ஒருவர் இந்த டுவிட்டை பகிர்ந்துள்ளார். இந்த டுவிட் ஆனது 17 வினாடி கொண்ட வீடியோவாக இருக்கிறது.

ஏலியன் இருக்கிறதா என்ற கேள்வி

அதில் ஏலியன் இருக்கிறதா என்ற கேள்விக்கு எலான் மஸ்க் பதிலளிக்கிறார். எலான் மஸ்க் கூறுகையில், இது ஒரு சிறந்த கேள்வி, ஏலியன் எங்கே என்பது இயற்பியல் மற்றும் தத்துவ ரீதியில் பெரிய கேள்வி, ஏலியன்கள் ஒருவேளை நம் மத்தியில் இருக்கலாம், அது எனக்கு தெரியவில்லை. ஒருசிலர் நானே ஏலியன் என்று நினைக்கிறார்கள் என கூறி சிறிது நேரம் அமைதியாக இருந்து மைக் அருகே வந்து அது உண்மையில்லை என குறிப்பிடுகிறார்.

நானே ஒரு வேற்றுகிரகவாசி என நினைக்கிறார்கள்

நானே ஒரு வேற்றுகிரகவாசி என சிலர் நினைக்கிறார்கள் என எலான் மஸ்க் நகைச்சுவையாக கூற கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்து கைத்தட்டுகின்றனர். அதன்பின் சிறுது நேரம் அமைதியாக இருந்துவிட்டு மைக் அருகே வந்து அது உண்மை இல்லை என குறுப்பிடுகிறார். மஸ்க் இதற்கு Of Course என பதிலளித்த பிறகு எலான் மஸ்க்கை பின்தொடரும் பல்வேறு நபர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பணக்காரர்களில் முன்னிலை வகிக்கும் எலான் மஸ்க்

பணக்காரர்களில் முன்னிலை வகிக்கும் எலான் மஸ்க்

உலக பணக்காரர்களில் முன்னிலை வகிக்கும் எலான் மஸ்க் தாயார் மேய் மஸ்க். எலான் மஸ்க்கின் இளம் வயது கணினி திறனாய்வு பரிசோதனையின் முடிவை தற்போது அவரது தாயார் வெளியிட்டார். சான்றிதழோடு பதிவிட்ட இந்த டுவிட்டர் பதிவு ஏணைய லைக்குகளை பெற்றது.

அவரது தாயார் பதிவிட்ட டுவிட்

அவரது தாயார் பதிவிட்ட டுவிட்

மேய் மஸ்க் பதிவிட்ட டுவிட்டர் பதிவு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக தகவல் மேலான்மை இயக்கனர் கையெழுத்திட்ட கடிதத்தோடு இருக்கிறது. எலான் மஸ்க் தனது 17 வயதில் கனடாவுக்கு செல்வதற்கு முன்பு கலந்து கொண்ட கணனி திறனாய்வு தேர்வு இதுவாகும்.

17 வயதில் கணினி திறனாய்வு சோதனை

17 வயதில் கணினி திறனாய்வு சோதனை

1989 தேதியோடு இந்த கடிதம் இருக்கிறது. இதில் உங்கள் 17 வயதில் கணினி திறனாய்வு சோதனையை கண்டேன். சரியாக நினைவில் இருந்தால், அவர்கள் இவ்வளவு அதிக மதிப்பெண்கள் பார்த்ததில்லை எனவே உங்களை மறுபரீசிலனை செய்ய வேண்டியிருந்தது. எனவே நீங்கள் ஒரு சிறந்த பொறியியலாளர் என்பதில் ஆச்சரியமில்லை என பதிவிட்டுள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ்

டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ்

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் பெரும்பாலும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். அதற்கு முயற்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் தோல்விகளை மஸ்க் சந்திக்கும் போது, இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
"Some People Think I am an Alien"- Elon Musk Answers Viral in Twitter
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X